Close Menu
    What's Hot

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!
    தமிழ்நாடு

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nagai bus issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாகை மாவட்டம் கீழப்பிடாகை பகுதியில், அதிகாரப்பூர்வமாகப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தும் கூட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கு நின்று செல்வதில்லை என அப்பகுதி மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பிடாகை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் விவசாயிகள் எனப் பெரும்பாலானோர் தங்களின் வெளிவட்டாரப் பயணங்களுக்குப் பேருந்து சேவையையே முழுமையாக நம்பியுள்ளனர்.

    மேலப்பிடாகை வரை நடக்கும் அவலம்: அரசு சார்பில் கீழப்பிடாகை பகுதியில் பயணியர் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியைக் கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் வேறு வழியின்றி நீண்ட தூரத்திலுள்ள மேலப்பிடாகை பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று பேருந்து ஏற வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இதனால் அவர்கள் தினசரி கடும் மன உளைச்சலுக்கும், கால விரயத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.

    நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான தீர்வும் எட்டப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நாகை மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கீழப்பிடாகை பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் கட்டாயம் நின்று செல்ல உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    bus stop buses pass Nagai without stopping
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!
    Next Article வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    June 22, 2026

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    June 22, 2026

    பிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.