2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜன. 6ஆம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது

குறிப்பாக, ஆளுநர் உரை, பட்​ஜெட் கூட்டத்தொடர், ஓய்வூதியம் உள்ளிட்டவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் வரும் 20-ம் தேதி தொடங்​கு​கிறது. அன்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி உரை​யாற்​றுகிறார். அவரது உரை​யில் இடம் பெற வேண்​டியவை குறித்து அமைச்​சர​வை​ கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்துள்ள நிலையில் அதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் முக்கிய அறவிப்புக்கள் பற்றி விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல், விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version