Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டம் ஒழுங்கில் திமுகவை போலவே தவெக அரசும் உள்ளது!. டிடிவி தினகரன் விமர்சனம்!
    தமிழ்நாடு

    சட்டம் ஒழுங்கில் திமுகவை போலவே தவெக அரசும் உள்ளது!. டிடிவி தினகரன் விமர்சனம்!

    Editor web3By Editor web3May 18, 2026Updated:May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay ttv dinakaran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டம் ஒழுங்கை காப்பதில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், கடந்த ஆட்சியின் நிலைதான் நீடிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில்,தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு – பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது.

    https://x.com/TTVDhinakaran/status/2056246374530998376?t=9mHh9mTaBVznLLayHiNDXA&s=08

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

    திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.

    எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்..

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிளாண்டர்ஸ் தொற்று!. சுற்றுலா தலங்கள்; கடற்கரை பகுதிகளில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு!
    Next Article வரலாற்றுச் சரிவில் இந்திய ரூபாய்… காரணம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.