காவல் நிலையத்தில் மூன்று பெண்கள் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மதுமிதா தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் சென்று கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றபோது, ராமர் என்ற காவலர், மூவரையும் தாக்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version