சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார்.

தவெகவின் கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிச.29,30,31 ஆகிய 3 நாட்கள் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கரூரில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஓட்டுநரிடமும் விசாரணை நத்தப்பட்டது. இதேபோல், கூட்ட நெரிசல் நடந்த இடத்திலும் விசாரணை நடத்திய சிபிஐ, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

அதாவது, இன்று (ஜன.12ஆம் தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனி விமான மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் வழக்கறிஞர் , நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார் விஜய்.

அரசியலில் நுழைந்த பிறகு எப்போதும் வெள்ளை சட்டையுடன் வெளியே வரும் விஜய், முதன்முறையாக கருப்பு சட்டை, பேண்ட் உடன் புது கெட்டப்பில் டெல்லி சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version