அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களாட்சியை உருவாக்க வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்திருக்கிறோம்.

எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளது; இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.

நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்; ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப, தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும் இன்றி இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொண்டோம்.

மக்களை வாட்டிக் கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்த கூட்டணியில் முழுமனதோடு இணைந்துள்ளோம். மக்கள் அனைவரும் வருத்தில் இருக்கிறார்கள் ஆனால் ஸ்டாலின் அவர்கள் அவரது மகனை பதவியில் அமர வைக்க துடித்துக் கொண்டிருக்கிறார் ” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version