Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம்!. எடப்பாடிக்கு விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?!. முதல்வர் விளாசல்!
    தமிழ்நாடு

    பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம்!. எடப்பாடிக்கு விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?!. முதல்வர் விளாசல்!

    Editor web3By Editor web3December 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13156438 mkstalinvseps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிஏஏ போல மகாத்மா காந்தி பெயர் நீக்க விவகாரத்திலும், அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? என்று விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?

    கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? #ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?

    #MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?

    திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?

    வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?

    இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகாத்மா பெயர் நீக்கம்!. மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்தார் ஓபிஎஸ்!.
    Next Article திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பு!. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.