Close Menu
    What's Hot

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பு!. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாணவன் உயிரிழப்பு!. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

    Editor web3By Editor web3December 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோஹித் என்ற மாணவன், பள்ளி சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்ததாகவும், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஊர் பொதுமக்களும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் மோஹித் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்தார்.

    ஆனால், நிவாரணத் தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அஜாக்கிரதையாக இருந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மாணவரின் உடற்கூறு ஆய்வு கோப்புகளில் கையெழுத்திடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மாணவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில், பள்ளி மாணவர் இறந்த சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மோஹித் என்ற மாணவர் இறந்தது வேதனைக்குரிய விஷயம். இந்த செய்தி வெளியானதில் இருந்து தமிழக முதல்வர் மூன்று முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாங்களும் விளக்கத்தை சொன்னோம். 2014ம் ஆண்டில் இந்த பள்ளி கட்டப்பட்டது.

    யாரும் பயன்படுத்தகூடாத, யாரும் போகக்கூடாது என்பதற்காக அங்கு கட்டுமான பொருட்கள் எல்லாம் சுவர் அருகே வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு வேலை செய்பவர்கள் அந்த கட்டுமான பொருட்கள் முழுமையாக எடுத்து சென்று விட்டனர். அங்கு உட்கார்ந்து படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை பள்ளி சார்ந்திருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அஜாக்கிரதையால் அவர்கள் குற்றம் செய்ததாகத் தான் கருதுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம்!. எடப்பாடிக்கு விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?!. முதல்வர் விளாசல்!
    Next Article 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!. தமிழக அரசு!.
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    June 15, 2026

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    ‘ராயல்’ வார்த்தைக்கும் வாளுக்கும் தடை? இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய Dress Code அறிமுகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.