Close Menu
    What's Hot

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?. தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!
    தமிழ்நாடு

    விஜய் பிரச்சாரத்தில் நடந்தது என்ன?. தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!

    Editor web3By Editor web3March 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று (30) பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறையான அனுமதி பெறாமல் கூட்டத்தைக் கூட்டியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற காரணங்களுக்காக, பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தப் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக தவெக தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பிரச்சாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? மற்றும் விதிமீறல்கள் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகள் குறித்த முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவசாயிகளிடம் விழிப்புணர்வு! நெல் நாற்றுகளால் ‘100%’ வடிவம் அமைத்து தேர்தல் ஆணையம் அசத்தல்!
    Next Article சோனியா காந்தி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!
    Editor web3
    • Website

    Related Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    June 17, 2026

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.