Close Menu
    What's Hot

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?. விஜய் ஆவேசம்!
    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?. விஜய் ஆவேசம்!

    Editor web3By Editor web3March 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vellore vijay speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை. மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.

    நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.

    மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.

    சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.

    கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.

    சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.

    கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.

    திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு…

    எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

    இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

    பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?

    தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.

    தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?

    இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

    சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மளமளவென குறைந்தது!. சவரனுக்கு ரூ.1,200 குறைவு!. இன்றைய ரேட் இதோ!
    Next Article வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்!. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது”!. இந்தியா கடும் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.