Close Menu
    What's Hot

    கவிஞர் புவியரசு காலமானார்… இலக்கிய ஆர்வலர்கள் துயரம்

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்
    தமிழ்நாடு

    ‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்

    Editor web2By Editor web2June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cocaine
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, இன்று வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில், எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் சோதனை நடத்தியதில், அவரிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடமைகளைச் சோதித்தபோது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது.

    Chennai Airport

    அவர் போதைப்பொருளைச் சிறிய கேப்சூல்களாக மாற்றி, அப்படியே தனது வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கேப்சூல்கள் மருத்துவ உதவியுடன் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டன. அப்பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட போதைப்பொருட்களின் அளவு 850 கிராம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அது கொக்கைன் வகையைச் சேர்ந்த போதைப்பொருள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனுடைய சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்றும் கணிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர் கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் எங்கு விநியோகிக்கப்பட இருந்தது, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என்பன குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    AntiDrugOperation ChennaiAirport CocaineSeizure DrugBust
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅப்போலோ மருத்துவமனை தொடர்புடைய சிபிஐ வழக்கு ரத்து!
    Next Article முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.
    Editor web2
    • Website

    Related Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… இலக்கிய ஆர்வலர்கள் துயரம்

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… இலக்கிய ஆர்வலர்கள் துயரம்

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.