Close Menu
    What's Hot

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.
    Featured

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    Editor web3By Editor web3June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mayiladuthurai issue dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டம் – ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறையில் காதல் ஜோடி மர்ம மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

    திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் “கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு! ” எனக் குறிப்பிட்டு இன்று (30.06.2026) வெளியிட்டுள்ள பதிவில், “மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.

    இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.

    சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர் விஜய், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?. திமுக இதைக்கூட விமர்சிக்காமல் – கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர் விஜய்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

    #CMVijay #IAS #IPS #IFS #TNGovt cm vijay DMK inspection Mayiladuthurai lovers Mysterious death tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘அயன்’ பட பாணியில் வந்த ரூ.15 கோடி கொக்கைன் கடத்தல்
    Next Article போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!
    Editor web3
    • Website

    Related Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.