ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் தேவாரம் ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் சிவசந்துரு (23). வாலிபர் சிவசந்துரு தேவாரம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தெருவுக்கு அருகே மற்றொரு தெருவில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இந்த செல்போன் பேச்சு வளர்ந்து அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி அவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சிறுமியிடம் விசாரித்த போது,இதற்கு காரணம் சிவசந்துரு என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிவசந்துரு மீது தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவசந்துருவை கைது செய்த தேவாரம் போலீசார், போக்சோ வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version