Close Menu
    What's Hot

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து
    Featured

    3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியிடம் அபராதம் வசூலித்து ஊராட்சி உறுப்பினர்கள் விருந்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 ranji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்க முயன்றதாக ஊராட்சி (பஞ்சாயத்து) உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் இருந்து பணம் வசூலித்து விருந்து நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஜூலை 11-ஆம் தேதி, சிறுமியின் தாய் வெளியே சென்றிருந்தபோது, குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறிய பதின்பருவ சிறுவன், அந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், சிறுமியின் தாயின் விருப்பத்திற்கு எதிராக கிராம பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் கூட்டத்தில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.20 ஆயிரத்தை உடனடியாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், அந்த ரூ.20 ஆயிரம் பணத்தை பயன்படுத்தி சில பஞ்சாயத்து உறுப்பினர்கள் உணவு மற்றும் மதுபான விருந்து நடத்தியதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிராமத்துக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிறுமி மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை அதிகாரி மோகன் குமார் சிங் தெரிவித்தார்.

    போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளியை காப்பாற்ற பணம் பெற்றார்களா என்பது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

    மேலும், மாவட்ட குழந்தைகள் நலக் குழு, மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் வருவாய் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய குழு கிராமத்துக்குச் சென்று தனித்தனி விசாரணை நடத்த உள்ளது.

    அதேபோல், இந்த சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஷிஷிர் குமார் சிங் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுஷில் காக்கா தலைமையில் தனி விசாரணைக் குழுவையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

    3-year-old girl Child Abuse child assault Jharkhand panchayat members
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கக் குட்டியுடன் மாஸ் லுக்: சிவராஜ்குமாரின் ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
    Next Article நிர்மா சோப்பு பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் செயற்கை பால் விற்பனை!. அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலம்!
    Editor TN Talks

    Related Posts

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    July 14, 2026

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.