Close Menu
    What's Hot

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!
    Featured

    ஆன்லைன் பயண நிறுவனம் Trip.com-க்கு சீனா ரூ.5.2 பில்லியன் யுவான் அபராதம்… போட்டி விதிமீறலுக்கு அதிரடி நடவடிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 china
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனமான Trip.com Group மீது, சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, சீனாவின் State Administration for Market Regulation (SAMR) மொத்தம் 5.2 பில்லியன் யுவான் (சுமார் 770 மில்லியன் அமெரிக்க டாலர்) அபராதம் விதித்துள்ளது.

    SAMR வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Trip.com தனது இணைய தளத்தில் ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் டிராஃபிக் ஒதுக்கீடு (Traffic Allocation), பிளாட்ஃபார்ம் விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சில ஹோட்டல்களுடன் பிரத்யேக (Exclusive) ஒப்பந்தங்களை செய்து, பிற ஆன்லைன் தளங்களில் அவர்கள் செயல்படுவதை கட்டுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையை வழங்கும் பெயரில் சந்தைப் போட்டியை பாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில், நிறுவனத்திடம் இருந்து 1.66 பில்லியன் யுவான் சட்டவிரோத வருவாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கூடுதலாக 3.52 பில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஹோட்டல் உரிமையாளர்களிடம் இருந்து பிடித்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 122 மில்லியன் யுவான் முன்பதிவு டெபாசிட் தொகையை உடனடியாக திருப்பி வழங்கவும் SAMR உத்தரவிட்டுள்ளது.

    Trip.com நிறுவனத்தின் கீழ் Ctrip, Skyscanner, Qunar உள்ளிட்ட பயண முன்பதிவு சேவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து Trip.com நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் சன் (Jane Sun) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். ஒழுங்குமுறை அமைப்பு வழங்கிய அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம், ஹோட்டல்களுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதித்தது மற்றும் விலைகளை கட்டுப்படுத்தியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் Trip.com மீது சீன அரசு போட்டியியல் (Antitrust) விசாரணையை தொடங்கியது.

    இணைய தள நிறுவனங்களின் ஆதிக்கம், நியாயமற்ற போட்டி மற்றும் அதிகப்படியான விலைப் போட்டியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணைய சந்தையில் சமநிலையான போட்டி சூழலை உருவாக்கவும், நுகர்வோர் மற்றும் ஹோட்டல் தொழில்துறையின் நலனை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SAMR விளக்கியுள்ளது.

    Antitrust Fine china news Competition Law Online Travel Industry Trip.com
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாமியார் வேடத்தில் கைவரிசை!. வாட்ஸ்அப் மெசேஜால் சிக்கிய ராஜஸ்தான் கும்பல்!
    Next Article கலெக்டர் மேடம்… இது கரெக்டா மேடம்?. வடிவேலு படத்துடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு!.
    Editor TN Talks

    Related Posts

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    July 25, 2026

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    July 25, 2026

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    அடேங்கப்பா..!! ரூ.6,200 கோடி இழப்பீடா..!! தென்கொரிய தொழிலதிபருக்கு செக் வைத்த சியோல் கோர்ட்..!!

    போராட்டத்திற்கு ஆதரவு தர பணம், விமான டிக்கெட், ஹோட்டல் வசதி வழங்க முன்வந்தனர்” – நடிகை ஆகாங்க்ஷா புரி குற்றச்சாட்டு

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!

    ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.