எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கார்கே பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ராய்சூரில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களிடம் உரையாற்றினார். அப்போது, சமீபத்தில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்றது.

பாதுகாப்புப்படையின் தாக்குதலை சிலர் தங்கள் தனிப்பட்ட புகழாக எடுத்துக்கொள்கின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவர் பீகார் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். நாடும், ராணுவ வீரர்களும் ஒருபக்கம் போராடிக்கொண்டிருந்தபோது பிரதமர் மோடி மறுபக்கம் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால் நாட்டின் தலைவர்கள், மக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version