பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று சென்னையில் கட்சி சம்பந்தமான முக்கிய செய்தியை செய்தார்கள் மத்தியில் கூறியுள்ளார்.
“தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்ட பொழுது அனைத்து மக்களிடமும் திமுக அரசின் மீதான கோபத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் அனைவரும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். திமுக அரசின் மீது கடும் கோபத்தில் அவர்கள் இருப்பதோடு இந்த ஆட்சியை அகற்று வேண்டும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே திமுக ஆட்சியை அகற்றும் பணியில் எங்களது கட்சிக் கூட்டணி அமையும். அதாவது திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியுடன் பாமக கட்சி இடம் பெறும்”, என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் திமுக அரசு கொடுத்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாடி உள்ளார். மேலும் 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக தமிழகத்திற்கு வந்துள்ளது என்றும் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றும் தொடர்ந்து முதலமைச்சரும் நிதி அமைச்சரும் கூறி வந்த விஷயம் சம்பந்தமாக பொய் முதலீடு என்கிற புத்தகத்தை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். இவையெல்லாம் வெறும் பொய்கள் விளம்பரம் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் விடியல் எங்கே என்ற ஆவணத்தை பாமக கட்சி சார்பாக ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு விட்டோம். அதில் நீங்கள் திமுக அரசின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
