Author: Editor TN Talks

காங்கிரஸ் கூட்டணியை விஜய் பேச வேண்டாம் என்று தேமுதிக பிரபாகரன் பேசி இருப்பதால் அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். கடலூரி நடந்த தேமுதிக மாநாடு 2.0 மேடையில் வார்த்தைக்கு நாகரீகமற்ற முறையில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், ஜனநாயகன் பிரச்சனையை பயன்படுத்தி தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க பார்ப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதில், கடைசியாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பிரச்சனை போயிட்டு இருக்கு. விஜய் அண்ணனுக்கு ஒரு சின்ன அட்வைஸ். ஏனென்றால் அரசியலில் நான் மூத்தவன் என்று நீங்களே சொல்லி இருக்கீங்க. இன்று காங்கிரஸ் கட்சி அவங்க பேரம் பேசுவதற்காகவும், கூட்டணிக்காகவும் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. அவங்க போடுற தூண்டிலில் நீங்க விழுந்துடாதீங்க. அவங்களை நம்பிடாதீங்க. நீங்க நல்லா வரனும். உங்க படம் சினிமாவோட வச்சிக்காங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்வதாக சொல்லி உங்க கூட கூட்டணி வந்து பேரம் பேசி எதுவும் செய்ய மாட்டாங்க.…

Read More

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மேடையில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், அடுத்த தலைமுறை கட்சியின் தலைவர்களாக தங்களை அங்கீகரிக்கவில்லை என்று பேசியுள்ளார். மேடையில் தொண்டர்களின் ஆரவாத்திற்கு இடையே பேசிய விஜயபிரபாகரன், “எல்லாத்தையும் எதிர்த்து தான் அரசியல் பண்ண முடியும் புரோ. எங்க எது நடந்தாலும் முதல்ல தேமுதிகவை தான் குறை சொல்லுவாங்க. அடுத்த தலைமுறை தலைமுறைகளில் உதயநிதி சார், அண்ணாமலை அவர்கள், சீமான் அண்ணா, விஜய் சார போடுறாங்க. சந்தோஷம், நாங்க வரவேற்கிறோம். அனால், விஜய பிரபாகரனை போடவில்லை. ஏன் என் போட்டோவை போடவில்லை என்று கேட்கவில்லை. அவர்கள் அவர்களோட உரிமைக்காக பேசாறாங்க. ஆனால் மக்கள் உரிமைக்காக போராடும் தேமுதிகவையும், விஜய பிரபாகரனையும் போடவில்லை. ஏன் நாங்கள் வந்தால் உங்களுக்கு பிரச்சனையாகும் என்று பயமா.. பயம் என்றால் சொல்லிடுங்க. தேமுதிக எதிர் நீச்சல் போட்டே வளர்ந்த கட்சி. கேப்டனுக்காக…

Read More

கடலூரில் நடந்த தேமுதிக மாநாடு 2.0 வில் பேசிய விஜயபிரபாகரன், வார்த்தைக்கு வார்த்தை தனது தாய் பிரேமலதா விஜயகாந்தை புகழ்ந்து பேசினார். தொண்டர்களை பார்த்து பொங்கல் வாழ்த்துகளுடன் உரையை தொடங்கிய விஜயபிரபாகரன், தொண்டர்களின் மனம் அறிந்த ஒரே தலைவர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் என்றார். பின்னர் நானும் அரசியல்வாதி தான் சொல்ற அளவுக்கு பேச்சில் ஹைப் ஏற்றினார். எந்த கட்சியாவது தைரியமாக இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர்களுக்கு இப்படி முகப்பு அமைத்து மாநாட்டை நடத்த முடியுமா? நமக்கு சாதி இருக்கா? மதம் இருக்கா? என கேள்வி எழுப்பியவர், அவரே பதிலளிக்கும் விதமாக கேப்டன் என்ற ஒரு சொல்லில் தான் அனைத்து மதமும், கொள்கையும் இருக்கு என்றார். தேமுதிகவுக்கு இத்தனை சதவீத ஓட்டுதான் இருக்கு என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இந்த மாநாட்டை பாருங்கள்.. ஒவ்வொரு தொண்டர்களும் அவர்களே சாப்பாட்டை எடுத்து கொண்டு வந்து இங்கே எங்களுக்காக திரண்டு இருக்கிறார்கள்.…

Read More

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. அதை கடந்த செப்டம்பர் 4ம் தேதி விசாரித்த நீதிமன்றம் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூரியமூர்த்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

Read More

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு மாற்றி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை ஒட்டி  இன்று ரிலீசாக இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகனுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை குழு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இன்றே மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஏன் அவசரம், 2 நாட்களில் முடிவெடுக்கும் அளவுக்கு என்ன அவசரம், சான்றிதழ்…

Read More

இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் தொகுதி பங்கீட்டில் அதிமுகவை, பாஜக நிர்பந்திக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், மற்றும் நாதக கூட்டணியில் 4முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாநாட்டு போட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2021 தேர்தல் போல இந்த முறையும் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றிப்பெற்ற பாஜக, இம்முறை அதிகமான சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதற்கேற்றார்போல் இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற நயினார் நாகேந்திரன் அவரை…

Read More

தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைப்படம் வெளியாகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி நடித்துள்ள 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மொழி பிரச்சனை பேசும் பராசக்தி பொங்கலை ஒட்டி நாளை (டிச.10) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடித்ததால் பராசக்தி ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் பராசக்தில் படத்தில் கிட்டத்த 15க்கும் மேற்பட்ட இடங்களை கட் செய்ய தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதை படக்குழு ஏற்று கொண்ட நிலையில், இன்று பிற்பகல் பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைக்கு வருகிறது. படத்தின் ரன் டைம் 2.43 நிமிடங்களாக உள்ளது. ஜனநாயகன் வெளியீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில் பராசக்தி போட்டியின்று நாளை வெளியாகிறது.

Read More

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்ததால் அவரது கடைசி படமாக ஜனநாயகன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கலை ஒட்டி இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சில இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இன்று வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை ரத்து செய்து இன்னொரு நாளில் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில்,  படத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட தணிக்கை வாரியத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதத்தை கேட்ட நீதிபதி,” ஜனநயாகன் படத்தின் தணிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. அதன் தலைவர் அதிகார…

Read More

தேசிய ஜனநாயக கூட்டணி முழு வடிவம் பெறும் நாளாக ஜனவரி 28 ஆம் தேதி அமையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் கட்சிகள் சேருவதிலேயே நீண்ட இழுபறி இருந்து வருகிறது. அதனை சற்றே தணிக்கும் வகையில் அன்புமணி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமகவை கூட்டணியில் இணைத்த நிகழ்வு அமைந்திருக்கிறது. அடுத்து தேமுதிகவின் நிலை என்ன என்பது இன்று தெரிந்து விடும். கடந்த ஆண்டிலிருந்து அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படும் ‘அதிமுக – தவெக கூட்டணி’ என்பது பின்பு ‘என்.டி.ஏவில் விஜய்’ என மாற்றம் அடைந்திருந்திருந்தாலும், ”கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வந்துவிடுவார்கள்” என்ற பேச்சு தற்போதைய ‘ஜனநாயகன்’ தணிக்கை விவகாரத்தால் மீண்டும் அழுத்தமாக பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஒரு தெளிவான பார்வை இன்று வெளியாகும் தீர்ப்பின் அடிப்படையில் சற்றே தெரிந்து விடும். ஒருவேளை இதை…

Read More

வெனிசுலா​வின் புதிய அதிபர் டெல்சி ராட்​ரிக்ஸ் அமெரிக்காவின் அறி​வுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்​குதல் நடத்​திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்​தது. இரு​வரும் அமெரிக்காவின் நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளனர். இதைத் தொடர்ந்து வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்​ரிக்​ஸ், அந்த நாட்​டின் செயல் அதிப​ராக பதவி​யேற்று நாட்டை வழிநடத்தி வரு​கிறார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்​களில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா மக்​களின் நலன்​களில் அமெரிக்கா மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. அந்த நாட்டு மக்​களின் நலன்​களுக்கு தேவை​யான நடவடிக்​கைகளை அமெரிக்கா மேற்​கொள்​ளும். எங்​களது அறி​வுரைகளை டெல்சி ராட்​ரிக்ஸ் ஏற்று செயல்பட வேண்​டும். இல்​லை​யென்​றால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும். நிக்​கோலஸ் மதுரோவுக்கு ஏற்​பட்ட நிலை​யை​விட…

Read More