Author: Editor TN Talks
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 187 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்பல்பூரில் நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வர்கள் வெட்ட வெளியில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட இந்தப் பணிக்கு தினசரி படியாக ரூ.639 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் எம்பிஏ, எம்சிஏ என முதுநிலை பட்டம் பெற்றவர்களும் பங்கேற்றனர். இது வேலையின்மையின் தீவிரத்தை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபிபா தரவரிசையில் 2025-ம் ஆண்டை ஸ்பெயின் அணி முதலிடத்துடன் நிறைவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றம் இல்லை. ஸ்பெயின் அணி 1877.18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அர்ஜெண்டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்சுகல் (1760.38), நெதர்லாந்து (1756.27), பெல்ஜியம் (1730.71), ஜெர்மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன. இந்தியா 1079.52 புள்ளிகளுடன் 142-வது இடத்தில் உள்ளது. அடுத்த தரவரிசை பட்டியலில் வரும் ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும் ஃபிபா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைன் ராணுவத்துக்கு வர்த்தக ரீதியில் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் செயற்கைகோள்களை தாக்குவோம் என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். கீழடுக்கு சுற்று வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது தாக்குல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறியது. விண்ணில் செயல் இழந்த செயற்கைக்கோள் மீது ஏவுகணையை வீசி தகர்க்கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்தது. இந்நிலையில் ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள்கள் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கூரான இரும்பு துண்டுகளை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரும்பு துண்டுகளை சிறிய செயற்கைக் கோளில்…
எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வினோத்குமார் என அறிமுகம் செய்து கொண்டு, `முதல்வர் ஸ்டாலின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடைபெற்றது. சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் கிடைக்காததால் புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் மிரட்டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், “என் பெயர் வினோத்குமார். நான் தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருக்கிறேன். அடையாளம் தெரியாத இருவர் என்னை பலமாக தாக்கினர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தும் போலீஸார் வரவில்லை.…
கிறிஸ்துமஸையொட்டி, சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 255 பேருந்துகளும், நாளை 525 பேருந்துகளும் இயக்கப்படவிருக்கின்றன. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மொத்தம் 91 சிறப்புப் பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நாளை முதல் 28-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும். நீலகிரி…
புயல், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? திமுகவின் வாக்குத் திருட்டுக்கு அப்பாவி உழவர்களுக்கு துரோகம் செய்வதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசின் பல்வேறு ஆதாரங்களில் இருந்த நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக செலவிடப்பட்டதால் தான் உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும்…
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் முதல் மாநாடு நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி, டிசம்பரில் டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாடுகள் நடைபெற்றன. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் 4-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 5-வது தலைமைச் செயலாளர்கள் தேசிய மாநாடு வரும் 26-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். வரும் 28-ம் தேதி வரை 3 நாட்கள் மாநாடு நடைபெறும். இதில் தலைமைச் செயலாளர்கள் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர்.
காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 205 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது, தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 205 மருந்துகள் தரமற்ற வையாகவும், 2 மருந்துகள் போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்துப் பள்ளி தலைமையாசியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (டிச.23) முடிவடைகிறது. இதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது. அரையாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவடைவதை அடுத்து, நாளை டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதேபோல், அரையாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று…