Author: Editor TN Talks
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை டேக் ஆப், மாலிக் படங்களை இயக்கிய இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் குஞ்சாக்கோ போபன், பகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கைய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கும் 8-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்திற்கு “பேட்ரியாட்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லாலை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். நடிகர் மோகன்லாலும் பேட்டி ஒன்றில் படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், பணிக்கு வந்துள்ள மற்ற அர்ச்சகர்கள் கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று 3 அர்ச்சர்கள் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் அர்ச்சர்களை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். மேலும் முக்கிய நாட்களில் மாதாந்த வெள்ளிகளில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கு பூஜை…
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும்,ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு,சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும், நீர் வரத்து சீரான தகவல் வந்தவுடன்…
கடந்த 23-ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வரும் ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் கலாஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா காலையில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். திருச்செந்தூரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கை 7-7-2025 அன்று காலை 06 மணி முதல் காலை 6.47 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். ஆனால் வரும்…
சென்னையிலிருந்து சாய்நகர் சீரடி விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு தமிழக முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்பாடியில் இருந்து வேலூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் நடனங்கள் பாட்டு கச்சேரிகள் என அமைக்கப்பட்டு இருந்தது அனைத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டுக் கொண்டு வாகனத்தில் வந்தார். திமுகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர். புதிய பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மாவட்ட திமுக அலுவலகம் வரை நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார். பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் மகளிரிடம் கைகுலுக்கி சிரித்து பேசினார். பின்னர் வேலூரில் ரூபாய் 197 கோடியே 81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பென்ட் லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
திரும்பிய பக்கமெல்லாம் “ஏங்க கூமாப்பட்டி வாங்க” என்ற கூப்பாடு கேட்டுக் கொண்டிருக்க, கோவாவை விட இன்று இளைஞர்களின் சுற்றுலாத் தல மவுசைப் பெற்றுவிட்டது விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி கிராமம். இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டிக்குக் கூவிக் கூவி அழைக்கும் டார்க் நைட் என்ற ஜெ.பி கோல்டு ஒரு இன்புளுயென்சர். தங்கள் ஊரின் அழகைத் தரமான விற்பனைப் பொருளாக்கி, அவர் வருமானம் ஈட்டி வருகிறார். இவரைப் போல பலரை நாம் நமது ஸ்மார்ட் போன்களில் பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் ஒரு இன்புளுயென்சர் இப்படியெல்லாம் செய்யலாமா? இன்புளுயென்சர்கள் என்றால் யார்? இன்றைய டிஜிட்டல் உலகில், இந்தக் கேள்விக்குச் சிறுபிள்ளை கூட பதில் சொல்லிவிடும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமான பின் தொடர்வுகளைக் கொண்டவர்கள், இன்புளுயென்சர் என்று அழைக்கப்படுகின்றனர். இதைத் தமிழில் செல்வாக்கு செலுத்துபவர்கள் என்று மொழிபெயர்க்கலாம். தொடர் செயல்பாட்டின் மூலம் மக்களின் ஆர்வத்தையும் வரவேற்பைப் பெற்று, தமது கருத்துகளைச் சமுதாயக் கருத்தாக மாற்றும்…
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில் சிக்கிடு சிக்கா என்று தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுதி உள்ளார். டி.ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரஜினியை எப்போதும் திரையில் பார்ப்போம் என்பதுதான். ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் கூட இந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அந்தவகையில் சிக்கிடு சிக்கா பாடலின் வீடியோவை பார்த்தவர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் தான் மிஞ்சியது. பெரிய அளவுக்கான ஒரு ஓபனிங் சாங்குக்கான பெப் என்பதே இல்லாமல் சமதளமான நடையில் பாடலின் இசை அமைக்கப்பட்டிருந்தது முதல் ஏமாற்றம். எப்போது பார்த்தாலும் அனிருத்தின் குரலில் ரஜினியின் பாடல் ஒலிப்பது ரொம்பவே எரிச்சலாக இருக்கிறது. மலேஷியா வாசுதேவன், எஸ்பிபி,…
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கும் திட்டத்திற்காக, டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கையடக்க கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை வெளியிட்டது. மடிக்கணினியின் அம்சங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள் மடிக்கணினியில் இருக்க வேண்டிய அம்சங்களாக, 8 ஜிபி ரேம் (DDR-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (SSD), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது AMD பிராசஸர், புளூடூத் 5.0, விண்டோஸ்…
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை…