Close Menu
    What's Hot

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை… 2 மணி நேரம் நீடித்த தேடுதல்…
    சினிமா

    நடிகர் கிருஷ்ணா வீட்டில் போலீசார் சோதனை… 2 மணி நேரம் நீடித்த தேடுதல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 23-ம் தேதி போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வரும் ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் கலாஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா காலையில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று காலையில் இருந்து இன்று வரை விடிய விடிய நடிகர் கிருஷ்ணாவிடம் பல்வேறு விதமாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் உள்ளதா என சைபர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு.. நேரத்தை மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..
    Next Article சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… அருவியில் குளிக்க வனத்துறை தடை…
    Editor TN Talks

    Related Posts

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    June 13, 2026

    உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!

    June 13, 2026

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    4-1 என்ற கோல் கணக்கில் மாஸ் காட்டிய அமெரிக்கா!. பராகுவேவை வீழ்த்தி வரலாறு!

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    மாறி மாறி பழிபோடும் அமெரிக்கா-ஈரான்!. “எங்க மாலுமிகள் உயிரோடு விளையாடாதீங்க!. ஜெய்சங்கர் வார்னிங்!

    பல்வேறு அடுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்; அடுத்தடுத்து 3 சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது டிஆர்டிஓ

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.