Author: Editor TN Talks

எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி மக்களவையில் உரையாற்ற இருந்தார். அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி அவைக்கு வர பயந்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் உரையின் போது காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக எனக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கூறியது நான் தான் என கூறினார். சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ( 05.02.2026 ) பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் பேச ஆரம்பிக்கும்…

Read More

45சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை கௌரவித்துள்ளார் இயக்குநர், நடிகர் பார்த்திபன். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் மற்றும் தூய்மை பணியாளர் பத்மா ஆகியோர் பங்கேற்று இருந்தனர். அப்போது மேடையில் பத்மாவிற்கு செருப்பு அணிவித்த பார்த்திபன், அவர் கால் தொட்டு ஆசி வாங்கினார். தொடர்ந்து அவருக்கு புடவை போர்த்தி கௌரவித்தார் பார்த்திபன். “பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பார்த்திபன் கூறினார். சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளரான பத்மா, கடந்த மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை காவல்நிலையத்தில்…

Read More

தேர்தல் அறிக்கைக்காக மக்களின் பரிந்துரைகளை கேட்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றது. குறிப்பாக முதல் முறையாக களம்காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பலப்படுத்துவதிலும், தொண்டர்களை இணைப்பதிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணிக்காக விசிக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளுடனும் மறைமுகமாகவும், நேரடியாக சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு எனக் கூறி பிற கட்சி நிர்வாகிகளுக்கு வலை வீசி வருகிறது தவெக. அதிமுக இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள நிலையில், தங்களது தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் பரிந்துரைகளை கேட்க முடிவெடுத்துள்ளது தவெக. இது குறித்து தவெக வெளியிட்டுள்ள செய்தியில், ” தமிழ்நாட்டின் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை,…

Read More

நாடாளுமன்றத்தில் தமிழ் குறித்து அதிர்ந்து பேசிய கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 4-ம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் உரையாற்றினார். தனது முதல் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி இறுதியில் தமிழில் முடித்தார். கடந்தாண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் படித்தால் பிச்சைக் கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என பெரியார் பேசியதை குறிப்பிட்டிந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கமல்ஹாசன், தமிழ் பிச்சை எடுக்க உதவாது.. திருடவும் உதவாது..தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்PARLIAMENT-ல் கலக்கிய – கமல்ஹாசன் எம்.பி #கமல்ஹாசன் #ParlimentSession #parliament #ParliamentSession #KamalHaasan #NirmalaSitharaman pic.twitter.com/O9KOJTPtLF— TNTalks…

Read More

மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கத் திட்டமிட்டிருந்த போது சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரை சபைக்கு வரவேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, ”பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார். மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா? இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சிவகார்த்திகேயன் தனது அடுத்தப் படம் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு மெரினா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததுடன், தனது இயல்பான நடிப்பால் குறிப்பிட்ட இடைவெளியில் 24 படங்களை நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் ஹிட்டான நிலையில், திரையுலகில் தனது 14வது ஆண்டை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஆண்டுகள் செல்ல செல்ல பொறுப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார். கஷ்டங்கள், போராட்டங்களை தாண்டி மக்களின் அன்பை மட்டுமே பார்ப்பதாகவும், அதற்காக இன்னும் உழைக்க காத்திருப்பதாகவும்” கூறினார். மேலும், ”தன்னுடைய அடுத்தப் படத்திற்கான இயக்குநர், தயாரிப்பாளர், போன்றோர்…

Read More

இந்தியாவில் 60 வயதை கடந்த முதியவர்கள் அதிகம் வசிக்கும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை மற்றும் மாநிலங்கள் நிதி அடிப்படையாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதியோர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3 பிரிவுகளாக மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் படி, 15 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர் உள்ள மாநிலங்களை முதுமை அடைந்த மாநிலங்கள் எனவும், 10 முதல் 15 சதவீதம் வரை முதியோர் உள்ள மாநிலங்கள் இடைநிலை மாநிலங்கள் என்றும், 10 சதவீதத்தை விட குறைந்த அளவில் முதியோர் உள்ள மாநிலங்களை இளைஞர் மாநிலங்கள் என வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15.8சதவீதம் முதியோர்கள் உள்ள நிலையில் இது 2031-ம் ஆண்டு 20.9சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆய்வு அறிக்கையின் படி, நாடு முழுவதும் 60 வயதை கடந்த…

Read More

பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியும் இம்மாத இறுதியில் தமிழாட்டிற்கு வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சிகளை ஆதரித்து தேசிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி இம்மாதம் 28-ம் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர், தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய இரட்டை என்ஜின் வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் டப்பா என் ஜின் ஆட்சி இங்கு எடுபடாது எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், வரும் 28-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலான கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளார். அதேப் போல மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியும் இம்மாத இறுதியில் தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. திமுக…

Read More

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற கேள்வியும், தேமுதிகவின் தேவைகள் என்ன என்பதும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டசபை மற்றும் 2011 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு வாங்கியை காட்டியதால், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைத்தும் வேறு விதமாக மாறியது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலர் மற்றுக் கட்சிக்கு மாறினர். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கி போட்டி போட்ட தேமுதிக படுதோல்வியை தழுவியது. அதன்பிறகு இன்று வரையிலும் தேமுதிகவால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியுடன்…

Read More

திரைப்படங்களுக்கான தணிக்கை சான்று வழங்குவதற்கான கால அவகாசத்தை 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் முழுநீள திரைப்படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த சான்றிதழ் வழங்கப்படுவதற்கு 48 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் படி, மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்றவற்றை மீறும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்க…

Read More