Author: Editor TN Talks
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை துரோகி எனக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த பகுதியை கடந்தப் போது, அவரைப் பார்த்து ”இதோ ஒரு துரோகி. பக்கத்திலேயே செல்கிறார்” என்றார். தொடர்ந்து “வணக்கம் சகோதரரே எனது துரோகி நண்பரே கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வருவீர்கள்” என்று கூறியப்படி அவருடன் கை குலுக்க ராகுல் காந்தி முயன்றார். அதற்கு பதிலளித்த இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, ‘நாட்டின் எதிரி’ எனக் கூறியப்படி ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார். இருவரும் கடுமையான வார்த்தைகளை நாடாளுமன்ற வளாகத்தில் பரிமாறிக் கொண்டது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை பழனியாண்டியே நேரடியாக கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம். கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.கஸ்டலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா? இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி…
விஜய் மீது நடிகர் அனுமோகன் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து, அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகரும் தயாரிப்பாளருமான லெனின் தெரிவித்துள்ளார். ’ரெட் லேபிள்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான லெனின், ஹீரோயின் அஸ்மின், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், நடிகர் அனுமோகன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்கள் படக்குழுவினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவ்வாறு அனுமோகனிடம் 2026 சினிமா உலகில் மாற்றம் ஏற்படும் என சொல்கிறீர்களே, அரசியல் களத்திலும் அதுபோல் மாற்றம் ஏற்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”நிச்சயமாக மாற்றம் ஏற்படும். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழாது. அனைத்து ஊடகங்களிலும் ஒருவரின் பெயரை அதிகமாக ஒளிப்பரப்பட்டு வருகிறதல்லவா? அவருக்கு பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது” என மறைமுகமாக தமிழக…
எதிர்வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும் என காங்கிரஸ்க்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். நடிகர் விஜய் தற்போது அரசியலில் அடியெடுத்து வைத்து தனது தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். WORK FROM HOME அரசியல் செய்கிறார், WEEK END அரசியலில் ஈடுபடுகிறார் என பலகட்ட விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டாலும், சமீபத்தில் தனது தவெக கட்சியின் 3-ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறார் விஜய். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கணிசமான ஓட்டுகளை வாங்கும் என அரசியல் விமர்சகர்களும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி வைக்க மறைமுகமாக பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பல மேடைகளில், தங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என உறுதியளித்து வருகிறார் விஜய். இதன்மூலம் விசிகவுக்கும், நாம் தமிழர்…
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அண்ணா நகர் உண்டு.. தமிழ் நிலமெங்கும் அண்ணா சிலைகள் உண்டு… சென்னையில் அண்ணா நகரும் உண்டு, அண்ணா மேம்பாலமும் உண்டு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் உண்டு, அண்ணா பல்கலைக்கழகமும் உண்டு. அவர் தொண்டனாக இருந்த இயக்கம் இப்போதும் இருக்கிறது. அவர் ஆரம்பித்து வைத்த கட்சி இப்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. அவர் பெயரிலான கட்சி எதிர்கட்சியாக வலம்வருகிறது. ஆனால் தமிழர் இல்லங்களில், அவர் வழிவந்த கட்சித் தொண்டர்களின் உள்ளங்களில் அண்ணா இருக்கிறாரா? என்பதே அவரது 57-வது நினைவுதினத்தில் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி. “காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் – கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்”, “அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா” என உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன வீதிதோறும் அண்ணாவைப் பற்றிய பாடல்கள். அவரைப் போல பேசிக்காட்டும் குரல் கலைஞர்கள் மேடைதோறும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சிலைகள் ரோஜாப்பூக்களுக்குள் புதைந்து…
ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளில் உயிரிழந்த தலைவர்கள் குறித்த விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம். 2026 மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் 4 பேருடன் பயணித்துள்ளார். பாராமதியில் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 2025 குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் மரணமடைந்தார். 2020 இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத், தனது மனைவி மற்றும் 11 பேருடன் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில்…
திமுக கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருக் சூழலில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ்நாட்டை ஊழலற்ற பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும், திமுக என்றால் கிரைம், மாபியா, கரப்ஷன். திமுகவை விரட்டி அடிக்கும் கவுன் டவுன் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டிற்கு இரட்டை என்சின் அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்கு இயங்குகிறது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த அரசு திமுக தான். திமுகவினர் கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும். கடந்த…
தேர்தல் வந்தால் மட்டும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கான ரூ.3,458 கோடியை எப்போது தர போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே.. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்” என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை…
திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், நெல்லை வழியாக பயணித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக தாம்பரம் வந்தடைகிறது. 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 8 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள், ஒரு உணவுக்கூட பெட்டி என 22 பெட்டிகள் உள்ளன. அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தென்னகவே ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நாகர்கோவில் – மங்களூரு, திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி வழித்தடங்களில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை…
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்தை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் மகாத்மா காந்தி பெயரை மாற்றி மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. அந்தவகையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானங்களை கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாக கொண்ட மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிதி வழங்காமல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தில் தமிழக அரசுக்கு வழங்க கூடிய ரூ.1,026 கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மீது மட்டும் மத்திய அரசுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை? 100 நாள் வேலையில் ஒவ்வொரு ஆண்டும்…