Author: Editor web1
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த எஸ்ஐஆர் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார். எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால்,…
12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. துபாயில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தகுதி பெற்றன. அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில், வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8…
சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த யோகலட்சுமி இணைந்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னை கதைக் களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். அண்மையில் விஜய் சேதுபதியும் ‘அரசன்’ படத்தில் இணைந்தார். இந்தநிலையில், அண்மையில் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டியில் முதற்கட்ட படிப்பிடிப்பு துவங்கி உள்ளநிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்பு உடன் விஜய் சேதுபதி உள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த யோகலட்சுமியும் உள்ளதால், அவரும் ‘அரசன்’ படத்தில் இணைந்துள்ளது உறுதியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாடினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி இன்று (டிச. 19) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் SIR மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, விபி ஜி ராம் ஜி மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா இன்று (டிச. 19) தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்பி.க்களும் விருந்தில் பங்கேற்றனர்.…
காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது பற்றி நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று (டிச. 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை நீதிபதிகள் பாராட்டினர். இருப்பினும், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும்,…
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (டிச. 19) தீர்ப்பு வழங்குகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் கட்சிகள் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழ்நாடு அரசு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்தநிலையில், தயாரிக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிடுகிறது. 2026ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. நவம்பர் 4ம் தேதி துவங்கிய வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், 100 சதவீதம் முடிவடைந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிச. 19) வெளியிட உள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், SIR பணிகள் சரியாக நடைபெறவில்லை என கூறப்படும் நிலையில், இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில், குளறுபடிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் உரிய…
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்தி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று (டிச. 18) 5வது நாளாக நடந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் …
பிரதமர் மோடிக்கு ஓமனின் உயரிய ‘ஆர்டர் ஆப் ஓமன்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி உடனான சந்திப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது வழங்கி கவுரவித்தார். ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை…
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி மாலை டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை மருத்துவர்கள் உட்பட 8 பயங்கரவாதிகளை NIA கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 9வது நபரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த யாசிர் அகமது தர் என்ற நபரை டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். கார் குண்டுவெடிப்பு சதியில் யாசிர் அகமதுக்கு முக்கிய பங்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக NIA அதிகாரிகள்…