Author: Editor web1
தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் 46வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (டிச. 8) நடைபெற்றது. எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதி நீர்ப் பிரிவு தலைவர் ரா.சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர். இன்றைய (டிச. 8) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டி.எம்.சி ஆக உள்ளது என்றும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,282 கன அடியாக உள்ளது என்றும் அணையில் இருந்து வினாடிக்கு 2,986 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை…
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனரான மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் நடித்தள்ள திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். இந்தநிலையில், ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். தனது X தளத்தில் துல்கர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு சகோதரர் ஜி.பி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ‘ஹேப்பி ராஜ்’ மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலின் கோர தாண்டவத்தில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஐ தாண்டியுள்ளது. அண்மையில் வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் இதுபோன்ற இழப்போ, சேதமோ ஏற்பட்டதில்லை என்றநிலையில் மிகப்பெரிய பாதிப்பை டிட்வா புயல் ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு ‘ஆப்பரேஷன் சார்பந்து’ திட்டத்தின் கீழ் இந்தியா பல்வேறு வகையில் உதவிகள் அளித்து வருகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் செயல்படும் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இதுவரை 1,250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 5 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 3 இரும்புப் பாலங்கள் அமைத்து தந்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இந்த…
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சவராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனை படைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூ.ட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அதிக முறை பதவியேற்ற, அவரின் சாதனை நிகழ்வை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதனை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். பீகாரின் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது…
‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து நாடாளுமன்றத்தில் நாளை (டிச. 8) சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இருப்பினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் கூட்டத் தொடரின் பணிகள் பாதிக்கப்பட்டது. இருப்பினும், அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்தநிலையில், SIR குறித்து டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மக்களவையில் விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், இந்த முடிவு…
மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.36,660 கோடி மதிப்பில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று (டிச. 7) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில், ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளன. அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. தொடர்ந்து 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். முன்னதாக ரூ.150.28 கோடி மதிப்பில் மதுரை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.795 கோடி மதிப்பில் 18,881 வளர்ச்சித் திட்டப்…
கோவாவில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள அர்புரா பகுதியில் உள்ள கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேளிக்கை விடுதியில் உள்ள சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள X பதிவில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீ விபத்தில் உறவுகளை இழந்தவர்களுடன் துணை நிற்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.…
மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 7) திறந்து வைத்தார். மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணா நகர், ஆவின் பாலகம், பாண்டி கோயில் ஆகிய 4 பகுதிகளை இணைக்கும் விதமாக மேலமடை சந்திப்பு உள்ளது. இந்த சாலை குறுகலான பகுதியாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் இருந்து வந்தது. மேலும், அந்தப் பகுதியில் மருத்துவமனைகள், திரையரங்குகள், தனியார் நிறுவனங்கள், ரிங் ரோட்டை இணைக்கும் பகுதியாக மேலமடை சாலை அமைந்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக அந்த வழியாக அலுவலங்களுக்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனையடுத்த, மேலமடை பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை மதுரை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே நீண்ட காலமாக எழுந்து வந்தது. இதனையேற்ற தமிழ்நாடு அரசு மதுரை- சிவகங்கை சாலையில் ஆவின் பாலகம் சந்திப்பு முதல் மதுரை-…
வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற AI தொழில்நுட்பம் அவசியம் என விண்வெளி வீரர் சுபான்ஷி சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷி சுக்லா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சுபான்ஷூ சுக்லா, பல்வேறு விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவியாக AI தொழில்நுட்பம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற AI தொழில்நுட்பம் அவசியம் என குறிப்பிட்ட அவர், 2047ம் ஆண்டுக்குள் நமது வளர்ச்சியின் கனவை அடைய AI தொழில்நுட்பம் உதவும் என்றார். இந்தக் கனவை நிறைவேற்றும் பொறுப்பை, நமது இளைய தலைமுறையினர் ஏற்றுக் கொண்டால், 2047ம் ஆண்டுக்கு முன்பாகவே அந்த இலக்கை நாம் அடைவோம் என்று சுபான்ஷி சுக்லா தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, நாட்டின் வளர்ச்சிக்கு…
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான போட்டி அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது. இதில், அதிபர் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு டிரம்புக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பான்டினோ அதிபர் டிரம்புக்கு வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அதிபர் டிரம்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக ஃபிபா தலைவர் இன்பான்டினோ தெரிவித்துள்ளார். இந்த விருது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனி நபர்களை அங்கீகரிப்பதற்காக மக்கள்…