Author: Editor web3
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்போரை வரவேற்போம் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக்கழக சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்…
வாக்காளர் பட்டியல் மதிப்பாய்வின் போது தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், சமையலறை ஆயுதங்களுடன் பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், SIR தொடர்பாக அரசியல் சூடுபிடித்துள்ளது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) குறிவைத்து கடுமையான கருத்துக்களை முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவருகிறார். இந்தநிலையில், SIR இன் போது மாவட்ட நீதிபதிகளின் பணிகளைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து பாஜக சார்பு அதிகாரிகளை அனுப்புவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். வங்காளத்தின் கிருஷ்ணாநகரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய அவர், “தேர்தல்களின் போது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மிரட்ட டெல்லியில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டால், உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் , நீங்கள் அதை பொறுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் சமையலறையில் ஆயுதங்கள் உள்ளன. பெண்கள் முன்வந்து போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால்…
அருணாச்சலப் பிரதேசத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆபத்தான மலைப் பாதையில் இருந்து விலகி 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் ஹேலாங்-சாக்லகாம் சாலையில் உள்ள மெட்டெங்லியாங் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஆபத்தான மலைப் பாதையில் இருந்து விலகி ஆயிரக்கணக்கான அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 22 தொழிலாளர்கள் இறந்தனர், இதுவரை ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அனைத்து தொழிலாளர்களும் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெலாபுகுரி தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்புக் குழுவினர் 13 உடல்களை மீட்டுள்ளனர். மீதமுள்ள உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்குத்தான சரிவுகள், மிகவும் கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான சாலைகள் ஆகியவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளன. காவல்துறை, மாவட்ட நிர்வாகம், துணைப் பேரிடர்…
தனது மார்பிங் போட்டோ குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து மிரட்டும் செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கவிஞர் வைரமுத்து குறித்து குற்றச்சாட்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணக்கூடியவர் பாடகி சின்மயி. ஆனால் சமீபத்தில் சின்மயின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சமீபத்தில் ஒரு நடிகையின் மார்பிங் போட்டோவுக்கு கண்டனம் தெரிவித்து போலீசில் புகார் அளித்திருந்தார் சின்மயி. அதற்குப் பதிலடியாக, அவரது போட்டோக்களையே மார்பிங் செய்து மிக மோசமான கேப்ஷன்களுடன் வைரலானது. இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த போட்டோக்களையும் கமெண்ட் செய்தவர்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். வீடியோவில்,“பெண்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்,…
ஊர் ஊராக உங்கள் தந்தைக்கு சிலை வைப்பது முக்கியமாக அல்லது அரசு பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திருவள்ளூர் பாலவாக்கம் அரசு பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததை சுட்டிக்காட்டி திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர். பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த…
நாடாளுமன்றத்தில் SIR விவாதத்தின்போது அமித்ஷா பதற்றமாக இருந்ததாகவும், அவரது கைகள் நடுங்கியதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற SIR குறித்த விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே வார்த்தை போர் வெடித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நேற்றைய விவாதத்தில் அமித் ஷா தனது கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை, எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறினார். மாறாக அமித்ஷா பதற்றமாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை நேற்று நாடே பார்த்ததாக கூறினார். நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் நடத்தை அசாதாரணமானது என்று கூறிய ராகுல் காந்தி, அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அவரது கைகள் நடுங்கின. முழு நாடாளுமன்றமும் இதைக் கண்டது. பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வருமாறு அமித் ஷாவை சபையில் வெளிப்படையாக சவால் செய்ததாகவும் , ஆனால் அதற்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரலாற்றில் எந்தப்…
SIR-க்கு எதிரான வழக்குகளில் இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும், மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், SIR-க்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, SIR தொடர்பாக புதிய வழக்குகள் அனுமதிக்கப்படாது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், SIR-க்கு எதிராக மற்ற மாநிலங்களில்…
விமான நிலையங்களில் அதிகரித்து வரும் குழப்பத்தைத் தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களிலும் இப்போது ஒரு மணி நேர நேரடி ஆய்வு கட்டாயமாக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது. பல விமான நிலையங்களில் பயணிகள் நெரிசல், விமான தாமதங்கள் மற்றும் இண்டிகோ விமான ரத்து போன்ற சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதன் ஆய்வு செயல்முறையை கடுமையாக்கியுள்ளது. புதிய உத்தரவின் கீழ், நாட்டின் ஒவ்வொரு முக்கிய விமான நிலையத்திலும் ஆய்வுக் குழுக்கள் வந்தவுடன் குறைந்தது ஒரு மணிநேரம் நேரடியாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனை வழக்கமான ஆய்வுகளிலிருந்து தனித்தனியாக இருக்கும், மேலும் திடீர் சோதனைகளும் இதில் அடங்கும். விமான நிலைய மேலாண்மை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பயணிகளின் வசதி தொடர்பான அனைத்து தரநிலைகளும் உடனடியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே DGCA-வின் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். புதிய வழிகாட்டுதல்களில், ஆய்வுக்…
கோல்டு கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப செல்ல வேண்டியது “வெட்கக்கேடானது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான பாதையை வழங்கும் புதிய மில்லியன் டாலர் விசா திட்டமான ‘டிரம்ப் கோல்ட் கார்டு’ திட்டத்தை அதிபர் டிரம்ப் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்த திட்டம், நிறுவனங்கள் நாட்டில் அத்தகைய திறமையாளர்களை பணியமர்த்தவும் தக்கவைக்கவும் உதவும் என்றார். இது புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான பாதையை வழங்கும் ஒரு விசா திட்டமாகும். “டிரம்ப் கோல்ட் கார்டு” என்பது அமெரிக்காவிற்கு கணிசமான நன்மைகளை வழங்குவதற்கான ஒரு நபரின் திறனை அடிப்படையாகக் கொண்ட விசா ஆகும். “இவ்வளவு சிறந்த ஒருவர் நம் நாட்டிற்கு வருவது ஒரு பரிசு,…
சீனா, இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் மீது 50% வரை வரி விதிக்கும் ஒரு பெரிய மசோதாவை மெக்சிகன் செனட் நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து, மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது அதிக வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், மெக்சிகோ நாடாளுமன்றம் புதன்கிழமை ஆசிய நாடுகள் மீது 50% வரை கடுமையான வரிகளை விதிப்பதாக அறிவித்தது. மெக்சிகோவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படும். இது 2026 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சீனா, இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஆசிய நாடுகளும் அடங்கும். இந்த நாடுகள் மெக்சிகோவின் மொத்த இறக்குமதியில் பெரும் பகுதியை உள்ளடக்குகின்றன (2024 இல் $253.7 பில்லியன்), மேலும் அவற்றுடனான வர்த்தக பற்றாக்குறை $223 பில்லியன் ஆகும். இந்தப் புதிய சட்டத்தின்படி, கார்கள், வாகன பாகங்கள், ஆடை-ஜவுளி, பிளாஸ்டிக்…