Author: Editor web3

2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசான நர்கஸ் முகமதியின் கைதுக்கு நோர்வே நோபல் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கு 680 கி.மீ. தொலைவில் உள்ள மஹ்சத் நகரில், மர்மமான முறையில் இறந்த மனித உரிமை வழக்கறிஞர் ஒருவரின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நிர்வாகம் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியிருந்தாலும், கைது செய்யப்பட்டவர் முகமதிதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் இது தெஹ்ரான் மீதான மேற்கத்திய அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரித்துள்ள நோர்வே நோபல் குழு, “முகமதியின் இருப்பிடத்தை உடனடியாக தெளிவுபடுத்தவும், அவரது பாதுகாப்பையும் நேர்மையையும் உறுதிப்படுத்தவும், நிபந்தனைகள் இல்லாமல் அவரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஈரானில் உள்ள மனித உரிமைகளுக்கான மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹாடி கெய்மி, இந்தக் கைது “மிக அடிப்படையான மனித சுதந்திரங்கள் மீதான இஸ்லாமியக் குடியரசின்…

Read More

எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்.. சாதனைகளின் பக்கம் நில்லுங்கள்’ என்று தவெக தலைவர் விஜய் குறித்து நடிகர் சத்யராஜ் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்திற்கு பின்னர் திறந்த வெளி அரங்கில் முதல் முறையாக புதுச்சேரியில் உப்பளம் துறைமுக திடலில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவை நம்பாதீங்க… அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாத்துவது தான் வேலையே என்று தாக்கி பேசியிருந்தார். இந்தநிலையில், இந்நிலையில் நடிகரும், பெரியார் கொள்கைகள் மீது பற்று கொண்டவருமான சத்யராஜ் பல மேடைகளிலும் தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை மறைமுகமாக கூறி வருகிறார். ஒருபக்கம் அவரின் மகள் திவ்யா சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவிலும் இணைத்து கொண்டார். பேசும் மேடைகளில் விஜயை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் வெல்லும் தமிழ் பெண்கள்.. மகளிர் உரிமை தோட்டத்தில் இரண்டாவது கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய சத்யராஜ்…

Read More

2024-25 நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு அதிகபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 16 சதவீதம் அதிகரித்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை முந்தியுள்ளது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ‘இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரக் கையேடு, 2024-25’ என்ற அறிக்கை, தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் கூர்மையான உயர்வைப் பதிவு செய்து, நாட்டின் உயர் வருமானப் பொருளாதாரங்களில் ஒன்றாக அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2023-24 ஆம் ஆண்டில் ரூ.26.88 லட்சம் கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.31.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக வேகமான பொருளாதார…

Read More

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தனிமைச் சிறைவாசம் மற்றும் மனிதாபிமானமற்ற தடுப்புக்காவலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு பாகிஸ்தானிடம் ஐ.நா. சிறப்பு நடைமுறைகளின் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்ரான் கான் செப்டம்பர் 26, 2023 முதல் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட கால தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளி உலகத்துடனான தொடர்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த அறை தொடர்ந்து கேமரா கண்காணிப்பில் உள்ளது. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் குறைவாக உள்ளது. கோடை மற்றும் குளிர்காலத்தில் வெப்பநிலை உச்சத்தை எட்டும். காற்றோட்டம் இல்லாததால் துர்நாற்றம் மற்றும் பூச்சி தொல்லைகள் ஏற்படும். இம்ரான் வாந்தி, குமட்டல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றால் அவதிப்படுகிறார். வெளியே நடக்கவோ, மற்ற கைதிகளைச் சந்திக்கவோ அல்லது சபை பிரார்த்தனைகளில் பங்கேற்கவோ அவருக்கு அனுமதி இல்லை. வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்திப்புகள் அடிக்கடி தடைபடுகின்றன அல்லது முன்கூட்டியே நிறுத்தப்படுகின்றன என்ற் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள்…

Read More

காற்று மாசுபாடு விவகாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 10வது நாளில் , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு குறித்த கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய அவர், நான் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களைப் பற்றிப் பேசுகிறேன். இது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையக்கூடிய ஒரு பிரச்சினை . நமது எதிர்காலம் சேதமடைந்து வருகிறது, மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள், நாங்கள் சுவாசிக்க முடியவில்லை. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன் என்று கூறினார். ” இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்துடன் விவாதிக்க வேண்டும். இது எதிர்காலத்தின் விஷயம். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, நாங்களும் இணைந்து செயல்படுவோம். சரியான திட்டம்…

Read More

ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026-ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 (வியாழக்கிழமை) – பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) -திருவள்ளூர் தினம், ஜனவரி 17 (சனிக்கிழமை) – உழவர்…

Read More

தமிழ்நாட்டில் அரியலூர்,பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக உலக எய்ஸ்ட் தினம் – 2025 ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒர் ஆண்டுக்காலங்களில் சிறந்த எச்.ஐ.வி பரிசோதனை மையம் மற்றும் எச்.ஐ.வி குறித்தான விழப்புணர்வை ஏற்படுத்தும் NGO களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் எச்.ஐ.வி விழிப்புணர்வு குறித்தான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் எச்.ஐ.வி.குறித்தான விழிப்புணர்வு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து…

Read More

2025 யு19 ஆசியக்கோப்பை தொடரின் யுஏஇ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டத்தால் இந்திய அணி 433 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடினார். டி20 வடிவத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த சூர்யவன்ஷி, இப்போது ஒருநாள் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார், 2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று (டிசம்பர் 12) தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை,…

Read More

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் கனவை தொடரும் நோக்கத்துடன் ஓய்வு முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயது வினேஷ் போகத், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். ரவுண்ட்-16 போட்டியில் ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறும் நிலையில், அவரது கனவு நொறுங்கியது. இதையடுத்து, அரசியலில் களமிறங்கிய அவர், ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், தான் அறிவித்திருந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.…

Read More

ஆண்டு முழுவதும் இந்தியர்களிடையே ஆரோக்கியம் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது . நீரிழிவு நோய் முதல் உடல் பருமன் வரை, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பல நோய்கள் பொதுவானதாகிவிட்டன. டிஜிட்டல் ஆதிக்கம் செலுத்தும் இந்த சகாப்தத்தில், ஒவ்வொரு சாதாரண மனிதனும் முதலில் அறிகுறிகளை “கூகிளில்” தேடுகிறார்கள். அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த ஆண்டும் சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. முன்பு, எடையைக் குறைப்பது எப்படி, நீரிழிவு அறிகுறிகள் போன்ற கேள்விகளை கூகுளில் தேடுவது பொதுவானது. ஆனால் இப்போது டிஜிட்டல் யுகம் நோய்களைக் கூட மாற்றியுள்ளது. ஆண்டு முழுவதும் கூகுளிடம் மக்கள் கேட்ட 10 கேள்விகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். சாதாரண சர்க்கரை என்றால் என்ன? இந்த வருடம் நீரிழிவு நோய்தான் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றாகும். வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு 70-100 மி.கி.க்கு இடையில்…

Read More