Author: Editor web3
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் தொடர்ந்து உட்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முக்கிய புள்ளியாக இருந்த செங்கோட்டையனும், விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். ஒருபக்கம் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் ஒருசேர்க்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இருப்பினும் அதற்கு எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்காமல் உறுதியாக உள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, கழகமாக மாற்றி புதிய கட்சியை…
இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடர் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், தற்போது சமநிலையில் உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில், 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனால், முல்லான்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு பதிலடி கொடுத்தது. குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் எடுத்த 90 ரன்கள் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 213 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. அதனால், இந்திய அணியின் சேஸ் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இறுதியில் ஓட்னியல் பார்ட்மேனின் 4/24 என்ற சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவை 162…
கர்நாடக காங்கிரஸில் முதலமைச்சர் பதவி விவகாரம் தொடர்பாக இன்று இருதலைவர்களும் டெல்லியில் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளனர் கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியைப் பிடிக்கச் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரிடமும் தலைமை பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள ‘ஒரு ரகசிய ஒப்பந்தம்’ போடப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் இதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. இந்தசூழலில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுக் காலம் நவம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து, ‘ரகசிய ஒப்பந்தத்தை மதித்து, டி.கே. சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும்’ என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் இருதரப்பு தலைவர்களுக்கு…
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, இன்று காலை கொல்கத்தா சால்ட் லேக் டவுனில் அமைக்கப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸி சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். மெஸ்ஸியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கை தட்டி வரவேற்றனர். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். மெஸ்ஸியை பிரபலங்கள் சூழ்ந்ததால், நேரில் பார்க்க முடியாமல் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மமதா பானர்ஜி, “சால்ட் லேக் மைதானத்தில் நடந்த மோசமான ஏற்பாட்டிற்கு நான் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடம்…
மோடியும், அமித்ஷாவும் பிரச்சாரம் செய்யும் தொகுதிகளில் திமுகவே வெற்றிபெற்றுள்ளது என்றும் இந்த முறையும் அவர்கள் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வரவேண்டும்’ என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கிண்டலாக பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிச.19ம் தேதிக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம். வாக்குச்சாவடி மையங்களை அதிகரித்தது எப்படி? அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 8 முறை பிரதமர் மோடி தமிழக வந்தும் எதுவும் எடுபடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் 202 தொகுதிகளில் திமுக வெற்றி…
திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகளவில் ஊழல்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் மோசமாக நடத்துவதாக குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு, திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; நான்கே முக்கால் வருடத்தில் திமுக மதுரை மக்களுக்கு என்ன செய்தது? இனி தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார். முதல்வர், துணை முதல்வர், என யார் என்ன பேசினாலும், அடுத்து ஆளப்போவது அதிமுக தான் என்றும் அதிமுகவை விமர்சிக்கவில்லையென்றால் முதல்வருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது என்றும் பேசியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமையாகவே செயல்படுவதாக கூறினார். மேலும், மாநகராட்சிக்கு மேயர்,…
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதை விமர்சித்த சீமான், முருகனும் சிவனும் இந்து கடவுளா?.. வாருங்கள் விவாதிப்போம் என்று சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் ஒரு குன்றில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி கட்சியினரும், பாஜகவினரும் போர்க்கொடி தூக்கினார்கள். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பும் அவர்களுக்கு சாதகமாக வரவே அங்கு அவர்கள் சென்று விளக்கேற்ற முயன்றார்கள். ஆனால் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதை காரணமாக காட்டியும், அங்கு 144 தடை விதித்திருப்பதை சொல்லியும் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் இன்று செய்தியாளிடம் பேசும் போது இந்த விவகாரம் பெற்றி பேசினார். தேர்தல் வரும் போதுதான் இவர்களுக்கு பக்தி வரும்.. போன வருடம் இவர்கள் ஏன் அங்கு விளக்கேத்த செல்லவில்லை?.. எதை வைத்து அரசியல்…
நாட்டின் நீதித்துறை அமைப்பு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன, ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. கரூர் நெரிசல் வழக்கின் விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்குப் பட்டியல் மற்றும் விசாரணை செயல்முறைகளில் “ஏதோ தவறு” இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் அறிக்கையைப் பெற்ற பிறகு உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது, இது ஏராளமான நடைமுறை குழப்பங்களையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியது. கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு எதிராக த.வெ.க. தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது?” என்று கேள்வி எழுப்பியது. இதன் மூலம், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை…
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும், பாமகவில் நிலவும் தந்தை – மகன் இடையேயான பிரச்சனை கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிமுக கூட்டணிக்குள் அவர்களை கொண்டு வர முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சரி பாதியை ராமதாஸ் தரப்பு கேட்பதாகவும், நான்கில் 3 பங்கு தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அன்புமணி தரப்பும் நிபந்தனை விதித்து…
நாடு முழுவதும் விமானக் கட்டணங்களை வரம்பிட முடியாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே இண்டிகோ சேவை முடங்கியதால் நாடு முழுக்க விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது. பல ரூட்களில் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிக விலைக்கு விமான டிக்கெட்கள் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, டிக்கெட் உச்சவரம்பை நிர்ணயம் செய்தது. இதற்கிடையே ஆண்டு முழுக்க விமான டிக்கெட்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே விமான டிகெக்ட்களுக்கு உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன்…