Close Menu
    What's Hot

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
    தமிழ்நாடு

    கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250627 WA0014
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

     

    திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

     

    ஜெகன் மூர்த்தி தரப்பு வாதம்:

    கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன் மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் காவல்துறை அவரை சேர்த்துள்ளதாகவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

     

    காவல்துறை தரப்பு வாதம்:

    காவல்துறை தரப்பில், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெகன் மூர்த்தியை சந்தித்த சிசிடிவி புகைப்படக் காட்சிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஒட்டுமொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாகச் செயல்பட்டது ஜெகன் மூர்த்திதான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

     

    ஜெகன் மூர்த்திக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், தனது அலுவலக கார் இந்த கடத்தலில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏடிஜிபி மறுக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

     

    நீதிமன்ற உத்தரவு:

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம் மற்றும் தொலைபேசி உரையாடல்களில் இருந்து, இந்த சம்பவத்தில் மனுதாரருக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன எனக் கூறி, ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    anticipatory bail CBCID Chennai High Court Jegan Moorthy Legal Matter Love Kidnapping MLA Puratchi Bharatham Katchi எம்எல்ஏ காதல் கடத்தல் சட்ட விவகாரம் சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றம் புரட்சி பாரதம் கட்சி முன்ஜாமீன் ஜெகன் மூர்த்தி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமியின் சூறாவளி சுற்றுப்பயணம்… வரும் 7-ம் தேதி முதல் தொடக்கம்…
    Next Article பராமரிப்புப் பணி.. ரயில் சேவைகளில் மாற்றம்!
    Editor TN Talks

    Related Posts

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    August 4, 2026

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    August 4, 2026

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.