Close Menu
    What's Hot

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது என்ன?.. காங்கிரசின் செல்வப் பெருந்தகை விளக்கம்..
    தமிழ்நாடு

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது என்ன?.. காங்கிரசின் செல்வப் பெருந்தகை விளக்கம்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    muruge down 1751899058
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்த விவகாரத்தில், ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால் அரசுக்கு களங்கம் ஏற்படுவதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை பேசியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வல்லக்கோட்டை முருகன் கோவில் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நல்லாட்சி நடக்கும் போது அதிகாரிகள் செய்யும் தவறால் ஆட்சிக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டு விட கூடாது உறுதியாக இருக்கிறேன். சமூக விடுதிகள் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார். ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறால் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இனி வரும் காலங்களில் இது போன்ற அவலங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    சில துறைகளில் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தான் ஆட்சியாளர்களுக்கு களங்கம் ஏற்படுகிறது. முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். மதுரை ஆலயத்தில் தலீத் மக்களுடன் மகாத்மா காந்தி உத்தரவின் பேரில் வைத்திய நாதர் அய்யர் ஆலய பிரவேசம் செய்த நாள்.

    வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கோபுரத்தின் மேல் நின்று கலந்து கொண்டார். என் தொகுதிக்கு வந்தால் அவருக்கு வணக்கம் சொன்னேன். அதிகாரிகள் அவருக்கு நல்ல கவனித்தார். ஆனால் சிறப்பு வழி கதவு திறக்க காத்திருந்ததாக பதிவு போட்டு உள்ளார். பொய், பித்தலாட்டத்திற்கும் பெயர் போனவர்கள் பா.ஜ.க.வினர். சிறப்பு வழியை நீதிமன்றம் எடுத்து பல ஆண்டுகள் ஆகிறது. யாருக்கும் சிறப்பு வழி கிடையாது. நான் மக்களுடன் எளிமையாக இருப்பவன். சிறப்பு தரிசனத்திற்கு போபவன் கிடையாது. பா.ஜ.க தலைவர்கள் பொய் சொல்லி வாழாமல் விலகி வர வேண்டும். 2007ல் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பரிவட்டம் கட்டுவதை எடுத்து விட்டார். இந்த புரிதல் இல்லாமல் ஆளுநராக இருந்தவர் பேசலாமா. பழி சொல்லி ஏதாவது பேசுவதை பா.ஜ.க. த்லைவர்கள் தவிர்க்க வேண்டும். வல்லக்கோட்டை முருகன் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. அவற்றை பார்த்தால் தெரியும். என் தொகுதியில் எங்க்ள் கட்சி தலைவரின் மகள் அவருக்கு சிறப்பு செய்தது மகிழ்ச்சி தான். பெருந்தன்மையாக வந்தேன். 2 துணை கமிஷனர்க்ள் அவருடன் இருந்தார்கள். ஆனால் என்னுடன் ஒரு உதவியாள் கூட கிடையாது. மக்கள் ஆல்ய தரிசனம் செய்ய வேண்டும். குற்றச்சாட்டு சொல்வதோ இல்லை.

    அதிமுக ஆட்சி காலத்தில் கஞ்சா வழக்கு இல்லையா. கொலைகள் எதுவும் நடக்கவில்லையா. அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவு தான். குறைவாக நடந்தது என்று விட்டு போக முடியாது. இதை கட்டுபடுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்க் வேண்டும். முதலமைச்சர் கூட்டம் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    எடப்பாடி பிரச்சாரத்தில் அண்ணாமலை மட்டுமில்லை செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கொங்கு மண்டல தளபதியாக இருந்தவர் ஏன் கலந்து கொள்ளவில்லை. அதிமுக-பா.ஜ.க. பெருந்தாத கூட்டணி. இதை அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். ஜெயலலிதாவை அண்ணாமலை திட்டாத திட்டே கிடையாது. அவர் மன்னிப்பு கேட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleThe old guard 2 – ஹாலிவுட் பட ரசிகர்களுக்காக…
    Next Article Parentel window மென்பொருள் குறித்து யாருக்குத் தெரியும்?
    Editor TN Talks

    Related Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    சென்னை : பற்றி எரிந்த 25 டயர் கடைகள்..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!

    யானைகள் சண்டையில் உயிரிழந்த பெண்..! ரூ.20லட்சம் இழப்பீடு அறிவிப்பு..!

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    விமான நிலையங்களில் ‘அலர்ட்’!. எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்தியா!. மத்திய அரசு அதிரடி!

    Trending Posts

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.