Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: மூன்று நீதிபதிகள் அமர்வு முக்கிய உத்தரவு!
    தமிழ்நாடு

    பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்: மூன்று நீதிபதிகள் அமர்வு முக்கிய உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நடப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு இன்று (ஜூலை 22, 2025) ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    வழக்கு பின்னணி
    பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் 2025 ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முறையீடு
    இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் P.சண்முகம் சார்பில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கருத்து சுதந்திரத்தின்படி அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது, அதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும். சொந்த இடங்களில் கட்சி கொடிக் கம்பம் வைக்க அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்காமல் கொடியை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை 18ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.

    முழு அமர்வின் விசாரணை
    இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவின்படி, மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சௌந்தர், நீதிபதி விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர். மேலும், சாலைகளில் நடப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் இடையூறு என்றால், சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிலைகளும் இடையூறுதானே, அவற்றை ஏன் அகற்றவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
    இந்த வழக்கில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் வெளிவரும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் முழு விளம்பரம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பின்னதாக வரும் எந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

    இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் வெளிவரக்கூடிய ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதுவரை, கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    Appeal August 6 Court Order CPI(M) Flagpoles Freedom of Expression Judges Madras High Court Political Parties Public Places Tamil Nadu government அரசியல் கட்சிகள் ஆகஸ்ட் 6 கருத்து சுதந்திரம் கொடிக் கம்பங்கள் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவு பொது இடங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவக்குமாரின் விளக்கம்…
    Next Article கணவரை கொன்று வீட்டினுள் புதைத்த மனைவி… தகாத உறவால் நேர்ந்த கொடூரம்…
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.