Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் விரைவில் குணமடைய த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து செய்தி!
    தமிழ்நாடு

    முதலமைச்சர் விரைவில் குணமடைய த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து செய்தி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2025Updated:July 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதற்கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக அரசு மற்றும் கட்சிப் பணிகளிலும், வெளி மாவட்ட பயணங்கள், ஆய்வுக் கூட்டங்கள், புதிய திட்டங்கள் தொடங்குதல், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இயங்கி வந்தார். அத்துடன், தேர்தல் பணிகளையும் கவனித்து வந்ததால், கடந்த மூன்று மாதங்களாக அவருக்குக் கடும் வேலைப் பளு இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே, கடந்த 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து காலமானார். அன்று நாள் முழுவதும் மு.க.முத்துவின் உடல் அருகிலேயே இருந்த முதல்வர், சாப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 21ஆம் தேதி காலை வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால் பாதியிலேயே அதை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொண்டபோதிலும், மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டதால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, கூடுதல் பரிசோதனைகளுக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தொடர்பான பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார்.

    பிரமுகர்கள் நலம் விசாரிப்பு:

    முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர். மேலும், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உதயநிதியைச் சந்தித்து ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை:

    அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்ததன் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை இன்று (ஜூலை 22 அன்று) காலை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. அன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் இயல்பாகவே இருந்தது. மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என்றும் தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தது.

    விஜய் வாழ்த்து:

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.

    — TVK Vijay (@TVKVijayHQ) July 24, 2025

    இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என்று அறிவித்து, திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Angiogram Apollo Hospital Chief Minister DMK Health Update M.k. stalin Political Figures Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam Vijay அப்பல்லோ மருத்துவமனை அரசியல் தலைவர்கள் ஆஞ்சியோகிராம் உடல்நலன் தமிழக அரசியல் தமிழக வெற்றிக் கழகம் திமுக மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி.. திட்டங்கள் என்னென்ன?
    Next Article பதவிக்காலம் நிறைவுற்ற எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு; புதியவர்களுக்கு வாழ்த்து
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.