Close Menu
    What's Hot

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி.. திட்டங்கள் என்னென்ன?
    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி.. திட்டங்கள் என்னென்ன?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2025Updated:July 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஜூலை 26) இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மாலத்தீவு சென்றுவிட்டு, அங்கிருந்து ஜூலை 26-ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தூத்துக்குடியில் திட்டங்கள் தொடக்கம்:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ₹4518 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    முக்கியத் திட்டங்கள்:

    தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி: சோழபுரம் – சேத்தியாதோப்பு சாலை திறப்பு.

    தூத்துக்குடி துறைமுகச் சாலை: ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ள சாலை திறப்பு.

    மதுரை – போடி நாயக்கனூர் ரயில் பாதை: மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை தொடக்கம்.

    நாகர்கோயில் – கன்னியாகுமரி மற்றும் நெல்லை – மேலப்பாளையம் ரயில் பாதை: இரட்டை ரயில் பாதை தொடக்கம்.

    திருச்சி, அரியலூர், தஞ்சாவூரில் நிகழ்ச்சிகள்:

    தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் காலை (ஜூலை 27) எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

    காலை 11 மணியளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர், அங்கு ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சென்று பாஜகவின் மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பிறகு திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    பிரதமரின் வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மாவட்டங்களில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி: ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் அடங்கிய ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினரும் தூத்துக்குடி சென்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    திருச்சி: திருச்சி விமான நிலையத்திலும், வழித்தடத்திலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகர காவல் துறை 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது.

    அரியலூர் மற்றும் தஞ்சாவூர்: கங்கை கொண்ட சோழபுரம் ஜூலை 26 மற்றும் 27 தேதிகளில் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும். அரியலூர் மற்றும் மத்திய மண்டலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் வாகன இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுத்தப்பட உள்ளனர். குறிப்பாக 26, 27 ஆகிய தேதிகளில் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க விட மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.

    Airport Expansion Ariyalur Gangaikonda Cholapuram Inauguration Infrastructure Projects Narendra Modi prime minister Rail Projects Road Projects Security tamil nadu Tamil Nadu visit Thanjavur Thootukudi Trichy அரியலூர் உள்கட்டமைப்பு திட்டங்கள் கங்கை கொண்ட சோழபுரம் சாலை திட்டங்கள் தஞ்சாவூர் தமிழக வருகை தமிழ்நாடு திருச்சி திறப்பு விழா தூத்துக்குடி நரேந்திர மோடி பாதுகாப்பு பிரதமர் ரயில் திட்டங்கள் விமான நிலைய விரிவாக்கம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஸ்ரீபெரும்புதூரில்: முதல்வர் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு
    Next Article முதலமைச்சர் விரைவில் குணமடைய த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து செய்தி!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    May 19, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    May 19, 2026

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.