Close Menu
    What's Hot

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்
    Uncategorized

    இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025Updated:November 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sng
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மாலையில் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார்.

    தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கட்சிக்குள் வலியுறுத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மறுத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே பழனிசாமியிடம் செங்கோட்டையன் பாராமுகமாக இருந்து வந்தார். ரகசியமாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்துவிட்டு வந்தார். கட்சியில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார்.

    இதனால், அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பசும்பொன்னில் அண்மையில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுகவின் பலத்தை, செங்கோட்டையனின் கோட்டையான கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நிரூபிக்க, நவ.30-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டக்கு பழனிசாமி ஏற்பாடு செய்து வருகிறார். இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், இன்று (27-ம் தேதி) தவெக-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்எல்ஏ பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

    செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதை அறிந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கொங்கு மண்டல திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் செங்கோட்டையன் உறுதியான பதிலைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தச் சூழலில் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று மதியம் செங்கோட்டையன் வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பிறகு, தவெக தலைவர் விஜய்யை சந்திக்க பட்டினப்பாக்கம் புறப்பட்டார். அப்போது, அவர் தனது காரில் செல்லாமல், ஆதவ் அர்ஜுனாவின் காரில் ஏறி பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    பட்டினப்பாக்கம் வீட்டில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். மாலை 4.30 மணி அளவில் தனது வீட்டுக்கு வந்த, செங்கோட்டையனை விஜய் வரவேற்றார்.

    தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு தேநீரும் வழங்கி உபசரித்தார். விஜய் – செங்கோட்டையனின் இந்த சந்திப்பு மாலை 6.33 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. குறிப்பாக இந்த சந்திப்பின் போது, செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைவது குறித்தும் அரசியல் நிலவரம் பற்றியும் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும், செங்கோட்டையன் போன்ற அனுபவம் மிக்க தலைவர் தவெகவில் இணைவது கட்சிக்கு வலு சேர்க்கும் என்பதால், செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (27-ம் தேதி) காலை 10 மணிக்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை
    Next Article சென்னைக்கு வெள்ள அபாயம் – தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு குட்நியூஸ்!. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு!. 

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.