Close Menu
    What's Hot

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்று பள்ளிகள் திறந்தாலும், எங்கள் போராட்டம் தொடரும்!. இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    இன்று பள்ளிகள் திறந்தாலும், எங்கள் போராட்டம் தொடரும்!. இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!.

    Editor web3By Editor web3January 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    secondary teachers strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறந்தாலும் சம வேலைக்கு சம ஊதியத்திற்கான போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2006 ஜூன் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 311 வது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல், மனித சங்கிலி, கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் என இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தின் 10வது நாளான நேற்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு சிவானந்தா சாலையில் 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழங்கிய மதிய சாப்பாட்டை சாப்பிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2009 ஆம் ஆண்டுக்கு பின்பு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். யாருடைய தூண்டுதலாலும் இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தான் கேட்கிறோம். போராட்டம் முடிவுக்கு கொண்டு வரக்கூடாது என நினைக்கிறார்களா என தெரியவில்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    எங்களை 10 நாட்கள் வரை போராட வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. ஊதிய முரண்பாடுகளை கலைந்தால் மட்டுமே பள்ளிக்கு செல்வோம். இல்லையென்றால் எங்களின் போராட்டம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும். இன்று முதல் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், மாணவர்கள் நலன் கருதி அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article ஒவ்வொரு மாதமும் 5000 ஊழியர்கள் பணிநீக்கம்!.  Zomato தலைமை நிர்வாக அதிகாரி அதிர்ச்சி தகவல்!
    Next Article பொங்கல் ரொக்கம் ரூ.3000!. இவர்களுக்கு கிடைக்காது!. முழு விவரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    Trending Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்!. 5,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! பள்ளிகள் மூடல்!.

    February 24, 2026

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026

    40 கேட்ட பாஜக!. 25 தான் என கையை விரித்த இபிஎஸ்?. தாமரைக்கு நோ சொல்லும் சிறிய கட்சிகள்!.

    February 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.