Close Menu
    What's Hot

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகம் முழுவதும் எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்!.  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!.
    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்!.  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!.

    Editor web3By Editor web3April 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    LPG tanker lorry strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்தம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக தற்போது இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு சீராகி வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒர் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.

    தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி நிறுவனம் ரூ.50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. நீண்ட காலமாக இந்த பாக்கியை வழங்க கோரி லாரி உரிமையாளர்களர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஐ.ஓ.சி நிறுவனம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை.

    இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை முதல் எல்.பி.ஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. எரிவாயு டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலங்களில்  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமானது நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது . இந்த சங்கத்தில் சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
    Next Article 110 கிலோ போதைப் பொருள் கடத்தல் – 22 புத்த துறவிகள் சிறைப்பிடிப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    April 27, 2026

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    April 27, 2026

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.