Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Fishers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், செருதூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, சுளிக்கி, தடி போன்ற ஆயுதங்களுடன் படகில் ஏறிய இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் அவர்களது ஜிபிஎஸ் கருவி செல்ஃபோன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அவர்களை தடியால் தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தாக்குதலை தடுத்த செருதூரை சேர்ந்த பழனிச்சாமி என்ற மீனவருக்கு கை உடைந்ததுடன், மற்ற மீனவர்கள் சக்திமயில், அபிமன், பாலசுப்ரமணியன், அபி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. படகில் இருந்த மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்துக் கொண்டு படகை மோதித் தள்ளிவிட்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். மீன்பிடி தளவாட பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்ப முயன்ற போது, இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையன் அஜந்தன் என்பவன் இந்திய மீனவர்களிடம் சிக்கினான். இதனைக் கண்ட மற்ற இலங்கை  கடற்கொள்ளையர்கள் படகை எடுத்துக் கொண்டு பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து அவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

    பிடிபட்ட இலங்கை கடற்கொள்ளையனுக்கு தர்மஅடி கொடுத்த மீனவர்கள், அவரை நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி இறங்கு தளத்திற்கு அழைத்துச் சென்று கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். செருதூர் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்கொள்ளையனிடம் கியூபிரிவு போலீசார் மற்றும் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article7 எம்.பி.களின் வருகை!. மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு!.
    Next Article தமிழகம் முழுவதும் எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்!.  சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!.
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.