தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்து வாக்கு எந்திரங்கள் ஐந்தடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன். வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
