Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள்!
    தமிழ்நாடு

    நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NEET exam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    எம்.பி.பி.எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் இந்த தேர்வு நடக்கிறது. நாடு முழுவதும் 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் மாணவர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 815 பேர், மாணவிகள் 13 லட்சத்து 32 ஆயிரத்து 928. மொத்த விண்ணப்பதார்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த முறை தேர்வு மையங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) முறையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கப்படும் வினாத்தாள்களையும் பயன்படுத்த உள்ளனர்.

    தேர்வின்போது விண்ணப்பதாரர்களை உறுதிப்படுத்தவும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் என்.டி.ஏ.கைரேகை ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பும் செய்யப்பட உள்ளது. நுழைவு வாயிலில் பாதுகாப்புச் சோதனைகளை தொடர்ந்து தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்கள், டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நேரடி சோதனைகள் மூலம் சோதனை செய்யப்படு வார்கள். தேர்வு மையங்களில் வழக்கமான சி.சி.டி.வி. கேமராக்களுக்குப் பதிலாக, ஏ.ஐ. இயக்கும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இவை தேர்வு அறையில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான அசைவுகள், மாணவர்களின் தேவையற்ற பேச்சு மற்றும் பிற முறைகேடுகளை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பும். மின்னணுத் தொடர்பு மூலம் நடைபெறும் மோசடியைக் கட்டுப்படுத்த, மையங்களில் உயர் அதிர்வெண் ஜாமர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த அமைப்புகள் மொபைல் நெட்வொர்க்குகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் 5ஜி சிக்னல்களைக் கூடத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கண்காணிப்பின் கீழ் கொண்டு செல்லப்படுகின்றன. தேர்வு நாளன்று பயோமெட்ரிக் சரிபார்ப்பில் சாதனக் கோளாறுகள், இணைய இணைப்புப் பிரச்சனைகள் அல்லது பிற காரணங்களால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தேர்வுக் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஒரு எளிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியை மட்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடு கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமை நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்பதில் இருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோடை வெயிலை தணிக்க காத்திருக்கும் மழை..! மக்களுக்கு குளு குளு நியூஸ்..!
    Next Article தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!
    Editor TN Talks

    Related Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.