Close Menu
    What's Hot

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!
    தமிழ்நாடு

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Court Hammer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச நீதி மிஷன்( International Justice Mission -IJM) ,  கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆய்வரங்குகளில் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி (Tamil Nadu State Judicial Academy) யின் வள ஆதார நிபுணராக (Resource Person) பங்களித்து வருகிறது.

    இந்த நிலையில், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும்,  தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் நன்றி தெரிவித்து இண்டெர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக இந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலத்தின் அட்வ்கெஸி ப்ரஸிடெண்ட் ரேச்சல் பிரசன்னா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ,  சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்கக வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புக் காட்டியதன் விளைவாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் மட்டும், 12 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், Tamil Nadu State Judicial Academy மற்றும் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோரின் ஊக்கத்துடன், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பை முன்னெடுக்க நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டததையும், 2025 நவம்பர் மாதத்தில் மறுவாழ்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வரங்கமும் நடைபெற்றதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “ இவ்வகை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், காவல்துறையினருடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு 60 நாட்களுக்குள் வழக்கை  முடிக்க வழிகாட்டி நெறிமுறைகள்  வெளியிடப்பட்டதையும்,  சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டதையும்- இப்படி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்து நடவடிக்கையால் மறுவாழ்வு அளித்து சமூகத்தில் மீளச் சேர்க்கும் பணிகளையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்திருப்பதையும்” பாராட்டி உள்ளார்.

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!
    Next Article மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    June 18, 2026

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    June 18, 2026

    திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியீடு!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.