Close Menu
    What's Hot

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    பயிர்க்கடன் தள்ளுபடிக்காக வயலில் தியானம்!. விவசாயிகள் நூதனப் போராட்டம்!

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கேஸ் தட்டுப்பாடு!. தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்வு!
    தமிழ்நாடு

    கேஸ் தட்டுப்பாடு!. தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்வு!

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hostel fees
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் பி.ஜி. (PG) கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக எரிவாயு விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாகவும், ஒரு சிலிண்டரை 6,000 முதல் 7,000 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பல விடுதிகளில் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தியே உணவு சமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது விறகு மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி விடுதி கட்டணத்தை உயர்த்துவதாக உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வரும் மே 5-ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏசி மற்றும் ஏசி இல்லாத அறைகளுக்கான கட்டணம் சுமார் 1,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதிய அறிவிப்பின்படி, இருவர் தங்கும் ஏசி அறைக்கு 9,000 ரூபாயும், மூவர் தங்கும் ஏசி அறைக்கு 8,000 ரூபாயும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாத அறைகளுக்கும் இதேபோல் விகிதாச்சார அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளில் வழங்கப்படும் கூடுதல் வசதிகளைப் பொறுத்து இந்த விலை மாறுபடலாம் என்றும், இக்கட்டான இந்த சூழலில் விடுதிவாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு, சென்னையில் தங்கிப் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய அரசு அமைந்ததும் பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியின் பெயர் மாற்றம் – சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம் உறுதி
    Next Article வி.சி.க.வினர் ஒற்றுமையாக பணியாற்றவில்லை: திருமாவளவன் அதிருப்தி
    Editor web3
    • Website

    Related Posts

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    June 18, 2026

    பயிர்க்கடன் தள்ளுபடிக்காக வயலில் தியானம்!. விவசாயிகள் நூதனப் போராட்டம்!

    June 18, 2026

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அம்மா உணவக இட்லி ஹோட்டல்களுக்கு விற்பனையா..?? நெல்லை மண்டல இயக்குநர் திடீர் ஆய்வு..!!

    பயிர்க்கடன் தள்ளுபடிக்காக வயலில் தியானம்!. விவசாயிகள் நூதனப் போராட்டம்!

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

    என் மகன் அரசியலுக்கு வருகிறாரா..?? எடப்பாடி பழனிசாமி ‘நச்’ பதில்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.