Close Menu
    What's Hot

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக வேட்பாளருக்கு எதிரான மோசடி வழக்கு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    தவெக வேட்பாளருக்கு எதிரான மோசடி வழக்கு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026Updated:May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 tvk 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை விற்பனை செய்து வரும் ராஜா என்பவர், தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், த லீட் பேக்டரி என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான அப்துல் ஜலீல் உடன் வர்த்தக பரிவர்த்தனை செய்து வந்துள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில்,  கொடுத்த 85 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டபோது, பணத்தைத் திருப்பி தரமறுத்து, மிரட்டல் விடுத்ததாக, ஜலீல் மீது  சென்னை திருமங்கலம் போலீசில் 2024ம் ஆண்டு ராஜா புகாரளித்தார்.

    எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு,  கடந்த ஆண்டு அப்துல் ஜலீலுக்கு எதிராக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ஜலீலை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருமங்கலம் போலீசார் முறையாக விசாரணை நடத்துவார்கள் என நம்பிக்கை இல்லை எனக் கூறி, வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா மனுத்தாக்கல் செய்தார்.

    மனுவில், கடையநல்லூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடும் ஜலீல், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், காவல்துறையினர், அவருடன் கைகோர்த்து செயல்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணாநகர் உதவி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கினை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2882 கிலோ குட்கா பறிமுதல் – மூவர் கைது
    Next Article தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?
    Editor TN Talks

    Related Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    June 18, 2026

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    June 18, 2026

    திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியீடு!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக கோயில்களில் ஆன்லைன் தரிசன அனுமதி சீட்டு!

    வரும் 20ம் தேதி டெல்லியில் மீண்டும் போராட்டம்! கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

    தனுஷின் ’ஓம்’!

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.