தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட நிலவரங்கள் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருச்சி மேற்கு தொகுதியில் மூத்த அமைச்சரான கே.என்.நேரு அவர்கள் தபால் வாக்கு எண்ணிக்கையிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் கே.என்.நேரு 4,261 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் 4,535 வாக்குகள் பெற்று 292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். நட்சத்திரத் தொகுதியான இங்கு ஒரு அமைச்சரை எதிர்த்துப் புதிய கட்சியான தவெக முன்னிலை பெற்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் அனலை கிளப்பியுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு மட்டுமல்லாது, திமுகவின் பல முக்கிய அமைச்சர்களும் தபால் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருமயம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் காட்பாடியில் திமுகவின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் தற்போதைய நிலவரப்படி பின்னடைவில் உள்ளனர். தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநிலை ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதா என்ற கேள்வியை இந்த ஆரம்பகட்டத் தரவுகள் எழுப்பியுள்ளன.
இதேபோல் தூத்துக்குடி தொகுதியிலும் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவு – தவெக முன்னிலை
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். தவெக முன்னிலையில் உள்ளது.
