Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»CPI-யை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தவெகவுக்கு ஆதரவு!
    Featured

    CPI-யை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தவெகவுக்கு ஆதரவு!

    Editor web3By Editor web3May 8, 2026Updated:May 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CPM support tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான சூழலில் பெரும் திருப்பமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக வெற்றிக் கழகம்  ஆட்சி அமைக்கத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இன்று சென்னையில் நடைபெற்ற அந்தந்தக் கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளன.

    நிலையான மக்களுக்கான ஆட்சி தொடர்வதற்கான நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் தவெகவிற்கு அளிக்கிறோம் என்று சிபிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட்டை தொடர்ந்து 2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள சிபிஎம்-யும் தனது ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.  இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்து தனது முடிவு இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். அந்தவகையில் தவெகவிற்கு விசிக-வின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திருமாவளவனும் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

     இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பட்டியலைச் சமர்ப்பித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு!.
    Next Article வா… வா… என் தேவதையே!… தந்தையான சூர்யகுமார் யாதவ்!. ரசிகர்கள் வாழ்த்து!
    Editor web3
    • Website

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 15, 2026

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.