தமிழ்நாட்டின் 17-வது சட்டசபைக்கூட்டம் இன்று கூடுகிறது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் 107 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்து மே 10ஆம் தேதி ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ., கருப்பையா பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து மே 11ஆம் தேதி புதிய எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா தமிழக சட்டப்பேரையில் நடைபெறும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டார்.
இன்று காலையில் 9.30 மணி அளவில் தமிழக சட்டசபை கூடிய புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மே 12 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்கின்றனர்.
