வேளாண்மைத்துறை & நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவது தொடர்பாகவும்,
காவிரி நீர் விவகாரம், குறுவை சாகுபடி, விவசாயப் பயிர்களுக்கான பயிர் காப்பீடு, நீர்நிலைகள் தூர்வாருதல் ஆகியவைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுவரும் நிலையில் இதுகுறித்தும் முதலமைச்சர் விஜய் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாகவும்,
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
