Close Menu
    What's Hot

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»துரந்தர் படத்தில் ராணுவ ரகசியங்கள் கசிவா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
    Featured

    துரந்தர் படத்தில் ராணுவ ரகசியங்கள் கசிவா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரன்வீர் சிங், சாரா அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் துரந்தர். இப்படத்தின் முதல் மற்றும் 2ம் பாகம் மிகப்பெரிய ஹிட்டானது. துரந்தரின் முதல் பாகம் ஓடிடி தளத்திலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இதன் இரண்டாம் பாகம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த சூழலில் துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சிபிஎப்சி எனப்படும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் தேசப்பற்று, பழிவாங்குதல், பாகிஸ்தானின் நிழல் உலக பயங்கரவாத செயல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,

    டெல்லியில் உள்ள எஸ்.எஸ்.பி எனப்படும் சஷஸ்திர சீமா பல்- ஆயுதமேந்திய எல்லைக் காவல் படையின் தலைமை காவலரான தீபக் குமார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், துரந்தர் 2 படத்தில் நம் ஆயுதப் படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    இது நாட்டின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”துரந்தர் 2 திரைப்படம் கற்பனைக் கதையாக இருக்கலாம் என்றாலும், மனுதாரர் எழுப்பியுள்ள கவலைகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை என புறந்தள்ள முடியாது. பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மறுக்க இயலாது.

    மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு என சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் விசாரிக்க வேண்டும். துரந்தர் திரைப்படத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”முதல்வர் விஜய் ஒப்புதலுடனேயே வந்தே மாதரத்துக்கு முதலிடம்”
    Next Article முழுமையடையும் தவெக அமைச்சரவை – ஆதரவு அதிமுகவின் நிலை என்ன?
    Editor TN Talks

    Related Posts

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    June 17, 2026

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    June 17, 2026

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.