Close Menu
    What's Hot

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    அவதூறு வழக்கிற்கு 6 மணி நேரம் விசாரணையா..?? திமுக நிர்வாகி சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»பணிப்பெண் வேடத்தில் ராணுவ ஜெனரல்!. ட்ரம்ப் பயணத்தின்போது சீனா உளவு பார்த்ததா?
    உலகம்

    பணிப்பெண் வேடத்தில் ராணுவ ஜெனரல்!. ட்ரம்ப் பயணத்தின்போது சீனா உளவு பார்த்ததா?

    Editor web3By Editor web3May 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    china spy trump visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க குழுவினரையும், குறிப்பாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சீனா உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் போல ராணுவ வீரர்களை மாறுவேடத்தில் அமர்த்தி சீனா இந்த உளவு வேலையை பார்த்ததாக பெய்ஜிங் மீது புகார்கள் எழுந்துள்ளன.

    ஜெனிபர் ஜெங் (Jennifer Zeng) என்ற சமூக ஊடக பயனர் இது குறித்து அடுக்கடுக்கான புகார்களைப் பகிர்ந்துள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசு விருந்தின் போது, எலான் மஸ்க்கிற்கு பின்னால் நின்ற பெண் ஊழியர்  உண்மையில் ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், அவர் சீன ராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதாவது, அந்தப் பெண்ணின் பெயர் Cheng Cheng. அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். சீன ராணுவத்தின் ‘ஹானர் கார்டு செரிமோனியல் பிரிகேட்’ பிரிவில் ‘மேஜர்’ அந்தஸ்தில் இருக்கும் பட்டாலியன் கமாண்டர். சீனாவின் முதல் பெண் ஹானர் கார்டுகளில் ஒருவரான இவர், ராணுவத்தில் ‘ஃபர்ஸ்ட்-கிளாஸ் மெரிட்’ உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். அந்தப் பெண் அணிந்திருந்த சிவப்பு நிற உடைக்கு அடியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒரு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்திருக்கலாம்” என்றும் ஜெனிபர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    ஜெனிபர் ஜெங் இது போன்ற உளவு மற்றும் சதி குற்றச்சாட்டுகளைக் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2023-ஆம் ஆண்டில், கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்குவதற்காக சீனா இதைச் செய்தது என்பது அவரது அப்போதைய குற்றச்சாட்டாகும்.

    ஜெனிபர் ஜெங் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சீன சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் போதிலும், இந்த உளவு குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!. 10 நாள்களில் 3-வது முறை உயர்வு!
    Next Article நீட் தேர்வு ரத்து!. தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற NTA முக்கிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    அவதூறு வழக்கிற்கு 6 மணி நேரம் விசாரணையா..?? திமுக நிர்வாகி சரமாரி கேள்வி..!!

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.