Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»களைகட்டிய கன்னியாகுமரி: கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
    தமிழ்நாடு

    களைகட்டிய கன்னியாகுமரி: கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

    Editor web1By Editor web1May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் இதமான வானிலை காரணமாக, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட இன்று (மே 24) மிக அதிகமாகக் காணப்பட்டது.

    கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை படகுகளில் சென்று கண்டு களித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்ய பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். பகவதி அம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், கடற்கரையோரம் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் சிப்பி மற்றும் சங்கு மாலைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை சிறப்பாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரைப் பகுதியில் விபத்துகளைத் தவிர்க்கவும், படகுத் துறையில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். இதமான காற்று வீசியதால், தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
    Next Article அறிவிக்கப்படாத மின் வெட்டு!. அவதியடையும் மக்கள்!. இபிஎஸ் கண்டனம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.