Close Menu
    What's Hot

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»BREAKING| மேகதாது விவகாரம்!. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
    Featured

    BREAKING| மேகதாது விவகாரம்!. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mekedatu Issue cm vijay order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு பூமிபூஜை நடத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க   முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும் என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் கடந்த 11.12.2025 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், முதலமைச்சர்  விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் பூமிபூஜை முயற்சி குறித்து, காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தத் தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, விரிவான சட்ட ஆலோசனைக்குப் பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு  முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்  ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,  எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தலைமைச் செயலாளர் சாய்குமார்,  அரசு தலைமை வழக்கறிஞர்  விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்  சத்யபிரத சாகு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக ஒரு திறனற்ற அரசு..! இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்…! கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்..!
    Next Article பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுக்க வேண்டும் – சமூகத்துக்கு கனிமொழி எம்.பி அழைப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    July 22, 2026

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.